Home
Mobile

தீபாவளிக்கு புது போன் வாங்குவது ஒரு Emotion.. அடுத்த 5 நாள்-ல மிஸ் பண்ண கூடாத 4 iPhone ஆபர்கள்!

2025 தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மீதமுள்ள நிலையில், அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், விஜய் சேல்ஸ் மற்றும் குரோமா போன்ற இ-காமர்ஸ் தளங்கள் ஆனது "போட்டி போட்டு கொண்டு" பல்வேறு வகையான ஆப்பிள் ஐபோன் மாடல்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றன.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) மாடல்கள் ஆனது இன்னுமும் அதன் ரீடெயில் விலைகளிலேயே விற்பனை செய்யப்படுவதால்.. "வாங்கினால் லேட்டஸ்ட் மாடலை தான் வாங்குவேன்" என்பவர்களை தவிர வேறு யாரும் எந்த பக்கம் போக வேண்டாம். மாறாக ஆபர் விலையில் கிடைக்கும் "பழைய" மாடல்களின் பக்கம் செல்லலாம்.

அடுத்த 5 நாள்-ல மிஸ் பண்ண கூடாத 4 iPhone ஆபர்கள்!

1. ஐபோன் 15 மீதான ஆபர்: இப்போதைக்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஐபோன் மாடல் என்றால் அது - ஐபோன் 15 தான். 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன், தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 15 முக்கிய அம்சங்கள்:
- செராமிக் ஷீல்ட் கிளாஸால் பாதுகாக்கப்பட்ட 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளே
- ஐஓஎஸ் 17
- ஆப்பிளின் இன்-ஹவுஸ் ஏ16 பயோனிக் சிப்
- 12எம்பி அல்ட்ராவைடு ஷூட்டருடன் 48எம்பி ப்ரைமரி கேமரா

2. ஐபோன் 16இ மீதான ஆபர்: இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16இ மாடல் இப்போது ரூ.49,990 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. நீங்கள் ஒரு சிறிய ஐபோனை வாங்க விரும்பினால், சிங்கிள் கேமராவுடன் அதை நிர்வகிக்க முடியும் என்றால்.. கண்களை மூடிக்கொண்டு ஐபோன் 16இ மாடலை வாங்கலாம். நீங்கள் இதை ரிலையன்ஸ் டிஜிட்டலில் (Reliance Digital) இருந்து ரூ.49,990 க்கு வாங்கலாம்.

ஐபோன் 16இ மாடலின் விரிவான அம்சங்கள்:
- எடையில் வெறும் 167 கிராம் மட்டுமே உள்ளது
- 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளே
- ஐஓஎஸ் 18.3.1
- ஆப்பிள் ஏ18 சிப்செட்
- 12எம்பி செல்பீ கேமரா
- சிங்கிள் 48எம்பி ரியர் கேமரா

3. ஐபோன் 16 மீதான ஆபர்: உங்கள் பட்ஜெட்டை கொஞ்சம் நீட்டிக்க முடிந்தால், ஐபோன் 16 மாடலை கூட நல்ல ஆபர் விலையில் வாங்கலாம். ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.79,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிளின் ஐபோன் 16 தற்போது இன்வென்ட் ஸ்டோரில் (Invent store) கேஷ்பேக்கிற்கு பிறகு ரூ.60,900க் கு விற்கப்படுகிறது.

ஐபோன் 16 மாடலின் முக்கிய அம்சங்கள்:
- ஐபோன் 16இ மாடலில் உள்ள அதே ஏ18 சிப்செட்
- 48எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 12எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஐபி68 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு

4. ஐபோன் 16 ப்ரோ மீதான ஆபர்: வாங்குறதே வாங்குறோம் ப்ரோ மாடல்-ஆ வாங்கிடலாமே என்று யோசிக்கிறீர்களா? ஆம் என்றால் இதுதான் அதற்கான நல்ல நேரமாக இருக்கலாம். 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 16 ப்ரோவின் பேஸிக் வேரியண்ட் ஆனது தற்போது பிக்பாஸ்கெட்டில் ரூ.99,990 க்கு விற்கப்படுகிறது.இது பிளிப்கார்ட், அமேசான் மற்றும் பிற தளங்களை விட ஒப்பீட்டளவில் குறைவான விலை ஆகு

ஒருவேளை நீங்கள் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடனான ஐபோன் 16 ப்ரோவை வாங்க விரும்பினால், பிளிப்கார்ட்டில் ரூ.1,04,999 என்கிற ஆபர் விலையில் வாங்கலாம். மேலும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு சலுகையை பயன்படுத்தி இந்த விலையை மேலும் குறைக்கலாம், இதன் கீழ் உங்களுக்கு கூடுதலாக ரூ.4,000 வரை தள்ளுபடி கிடைக்கும்

ஐபோன் 16 ப்ரோ முக்கிய அம்சங்கள்:
- 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளே
- ஐஓஎஸ் 18
- 12எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 48எம்பி அல்ட்ராவைடு சென்சார் ஆகியவற்றுடன் கூடுதலாக 48எம்பி ப்ரைமரி கேமரா (ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்)

More from GizBot

Best Mobiles in India

English summary
Buying New iPhone in Diwali is an Emotion iPhone 15 iPhone 16 iPhone 16e Offers Available Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X