வெயிட் செஞ்சது போதும் உடனே Xiaomi 13 Pro வாங்குங்க! விற்பனை துவங்கியாச்சு! விலை இதான்!
சியோமி நிறுவனம் (Xiaomi) இன்று அதன் புதிய சியோமி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) ஸ்மார்ட்போன் சாதனத்தை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. மிரட்டலான, இந்த சாதனத்தின் விலை மற்றும் சலுகை விபரங்களைப் பற்றி பார்க்கலாம்.
Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை மார்ச் 10 ஆம் தேதி, மதியம் 12 மணி முதல் துவங்குகிறது என்று Xiaomi அறிவித்துள்ளது. லைகாவுடன் (Leica) உடன் கூட்டாண்மை உடன் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் சாதனம் இதுவாகும். இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது mi.com, Amazon.in, Mi Homes மற்றும் Mi Retail பார்ட்னர்கள் மூலம் இப்போது விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.

Xiaomi 13 Pro விலை என்ன?
இந்த புதிய Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த சாதனம் ரூ.79,999 விலைக்கு வாங்க கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. Xiaomi 13 Pro மொபைல் சாதனத்தை வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்கள், நிச்சயமாக Xiaomi வழங்கும் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைத் தவறவிடக்கூடாது. இவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் Xiaomi 13 Proவின் விலையைக் கணிசமாகக் குறைக்கலாம்.
சியோமி மற்றும் அமேசான் வெளியிட்டுள்ள தகவலின் படி, Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் ஐசிஐசிஐ கார்டு பயனர்களுக்கு உடனடித் தள்ளுபடியாக ரூ.10,000 கிடைக்கிறது. இதன் மூலம் Xiaomi 13 Pro சாதனத்தின் விலையை ரூ.69,999 வரை நம்மால் குறைக்க முடியும். இது தவிர, Xiaomi / Redmi அல்லாத சாதனங்களை எக்ஸ்சேஞ் செய்யும் போது ரூ. 8000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் போனஸை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இதன் மூலம் Xiaomi 13 Pro சாதனத்தின் விலையை ரூ. 61,999 வரை குறைக்கலாம். Xiaomi விசுவாசிகள் மற்றும் ரசிகர்களுக்கு நிறுவனம் கூடுதல் சலுகையை வழங்குகிறது. உங்களிடம் பழைய Xiaomi/ Redmi ஸ்மார்ட்போன் இருந்தால், அதற்கு ஈடாக சாதன மதிப்பின் மேல் ரூ.12,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸை சியோமி இப்போது வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi 13 Pro சிறப்பம்சம்
Xiaomi 13 Pro சாதனம் 120Hz WQHD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் பெரிய 6.73' இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது E6 AMOLED மெட்டீரியல் 1,200 nits முழு பிரைட்னெஸ் உடன் 1,900 nits பீக் பிரைட்னெஸ் கொண்ட திறன் உடன் வருகிறது. Xiaomi 13 Pro ஆனது சமீபத்திய Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் இயங்குகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
Xiaomi 13 Pro ஆனது Leica ஆப்டிகல் லென்ஸ்கள் கொண்ட மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. இது 23மிமீ வைட் ஆங்கிள் மெயின் கேமராவுடன் அல்ட்ரா-லார்ஜ் 1 இன்ச் IMX989 சென்சார், 75மிமீ பிலோடிங் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 14மிமீ அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 4,820mAh பேட்டரியுடன் வருகிறது.
இது 120W ஹைப்பர் சார்ஜையும் ஆதரிக்கிறது. மேலும் இது 19 நிமிடங்களில் 100 சதவிகிதம் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது என்று நிறுவனம் கூறுகிறது. இது 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்குடன் 50W வயர்லெஸ் டர்போ சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனில் உள்ள அம்சங்கள் எல்லாம், அதிநவீன மற்றும் தற்போதைய லேட்டஸ்ட் அம்சங்கள் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications








