வெறும் ரூ.834/-க்கு ரெட்மீ 5; உடன் 100 ஜிபி இலவச டேட்டா; அமேசான் அதிரடி.!

வாடிக்கையாளர்களுக்கு மிகவும் இலாபகரமான ஆபர்களை வழங்குவதில் பெயர்போன அமேசான் இந்தியாவிடம் இருந்து ஒரு நம்பமுடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

|

வாடிக்கையாளர்களுக்கு மிகவும் இலாபகரமான ஆபர்களை வழங்குவதில் பெயர்போன அமேசான் இந்தியாவிடம் இருந்து ஒரு நம்பமுடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனை கனவில் கூட விரும்பிடாத ஒரு விலைக்கு அறிவித்துள்ளது.

வெறும் ரூ.834க்கு ரெட்மீ 5; உடன் 100 ஜிபி இலவச டேட்டா; அமேசான் அதிரடி!

அதாவது, ரூ.7,999/-க்கு வாங்க கிடைக்கும் ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 16ஜிபி மாடல் மீது ரூ.7,165/- என்கிற அளவிலான எக்ஸ்சேன்ஜ்வாய்ப்பு திறந்துவிடப்பட்டுள்ளது. ஆக, ஒரு பயனர் வெறும் ரூ.834/-க்கு ரெட்மீ 5 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இந்த இடத்தில் எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பும் ஸ்மார்ட்போனின் மதிப்பு அடிப்படையில் மாறுபடலாம் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

100 ஜிபி :

100 ஜிபி :

அமேசானின் இந்த எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பை தவிர்த்து, வாடிக்கையாளர்களுக்கு 'ஜியோ ரெட்மீ சலுகை' ஒன்றும் அணுக கிடைக்கும். இது 100 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவுடன் சேர்த்து, ரூ.2,200/- என்கிற உடனடி கேஷ்பேக் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த சலுகை ஜியோ பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

"அமேசான் 10-டேஸ் விண்டோ" வாய்ப்பு

எல்லாவற்றிக்கும் மேலாக, ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் மீது "அமேசான் 10-டேஸ் விண்டோ" வாய்ப்பும் அணுக கிடைக்கும். இந்த வாய்ப்பின் கீழ், கொள்முதல் செய்யப்பட்ட ரெட்மீ 5 மீது ஏதேனும் குறைபாடு கண்டால் அல்லது அதன் செயல்திறனில் திருப்தி கொள்ளவில்லை என்றால் அதை திருப்பி கொடுக்கலாம்.

டிஸ்பிளே :

டிஸ்பிளே :

கடந்த டிசம்பர் 2017 ல் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் ஆனது 5.70 இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 720 x 1440 என்கிற அளவிலான பிக்சல்கள் என்கிற அளவிலான தீர்மானத்தை கொண்டுள்ளது. 1.8GHz Octa-core செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு 3 ஜிபி ரேம் கொண்டு வருகிறது. 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோஎஸ்டி வழியாக மெமரி நீடிப்பு வழங்கும் ஆதரவும் கொண்டுள்ளது.

கேமரா :

கேமரா :

கேமராவைப் பற்றி பேசினால், ரெட்மீ 5 ஆனது அதன் பின்புறத்தில் ஒரு 12 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது. பின்பக்கத்தில் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.1.2 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3300mAh நீக்க முடியாத பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. அளவீட்டில் 151.80 x 72.80 x 7.70 (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 157.00 கிராம் எடையுள்ளதாக உள்ளது.

சென்சார் :

சென்சார் :

இரண்டு நானோ-சிம்கள் என டூயல்-சிம் ஆதரவு கொண்டுள்ள ரெட்மீ 5 ஆனது வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், யூஎஸ்பி ஓடிஜி, எப்எம், 3ஜி மற்றும் 4ஜி ஆகிய இணைப்பு விருப்பங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. சென்சார்களை பொறுத்தவரை, ஒரு பிராக்சிமிட்டி சென்சார், அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் ஆகியவைகளை கொண்டுள்ளது.

அவ்வப்போது அமேசான் இந்தியா தளம் வழங்கும் பல கேஷ்பேக், விலைகுறைப்பு, ஆபர்கள் மற்றும் விற்பனை திருவிழா போன்றவைகளை உடனுடக்குடன் அறிந்துகொள்ள தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Buy Redmi 5 at Rs 834, also get 100GB free 4G data. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X