Home
Mobile

அடிமட்ட விலை குறைப்பு.. iPhone வாங்க சூப்பர் சான்ஸ்.. என்ன மாடல்? என்ன விலை?

நீங்க காலமாகவே ஐபோன் வாங்க வேண்டும் என்கிற ஆசை இருந்தும் கூட, பட்ஜெட் ஒத்துழைக்காத காராணத்தினால் இன்னமும் ஐபோன் வாங்காத ஆயிரக்கணக்கான ஆப்பிள் ரசிகர்களில் நீங்களும் ஒருவரா? ஆம் என்றால்.. கவலையை விடுங்கள்! அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இதுவே சரியான நேரம்!

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனைக்கு (Amazon Great Indian Festival Sale) போட்டியாக பிளிப்கார்ட் நடத்தும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) பல வகையான ஐபோன் மாடல்கள் மீது விலை குறைப்புகளும், நேரடி தள்ளுபடிகளும், வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட விலை குறைப்பு.. iPhone வாங்க சூப்பர் சான்ஸ்!

ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களாக ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 Series) மிகவும் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதால், பழைய ஐபோன் மாடல்கள் மிகப்பெரிய விலை வீழ்ச்சிகளை கண்டுள்ளன. அவைகளில் பெரும்பாலான பட்ஜெட் வாசிகளின் கவனமும், ஆப்பிளின் மிகவும் மலிவான மாடல்களில் ஒன்றான ஐபோன் 12 (iPhone 12) மீதே உள்ளன.

ஏனென்றால், ஐபோன் 15 அறிமுகமான பின்னரும் கூட, ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகள் பழைய மாடல்களான ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 13 (iPhone 13) மாடல்கள் இன்னமும் விற்பனைக்கு உள்ள நிலையிலும் கூட, பட்ஜெட் வாசிகள் மத்தியில் ஐபோன் 12 மீதான "மவுசு" கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை!

அப்படியான ஐபோன் 12 மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.54900 க்கு பதிலாக ரூ.45999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது 16 சதவீத நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. மேலும், நீங்கள் ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டை (ICICI Bank Debit Card) பயன்படுத்தி ஐபோன் 12 மாடலை வாங்கினால் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

இதன் மூலம் ரூ.5,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களில் ரூ.750 வரை சேமிக்க முடியும். இதுமட்டுமின்றி, நீங்கள் உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.39150 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகையும் (Exchange Offer) உங்களுக்கு கிடைக்கும். இறுதிக்கட்ட எக்ஸ்சேன்ஜ் வேல்யூவானது (Exchange Value) நீங்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் நிலையை பொறுத்து வேறுபடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 12 மாடலை நம்பி வாங்கலாமா? என்கிற சந்தேகம் உங்களுக்குள் இருந்தால்.. அறிமுகமாகி 3 ஆண்டுகள் ஆகியும் கூட, இதை ஏன் நம்பி நம்பி வாங்கலாம் என்பதற்கான சில காரணங்கள் இதோ: ஐபோன் 12 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை (Super Retina XDR Display) கொண்டுள்ளது. இன்னமும் இதுவொரு நல்ல கேமரா போனாகவே உள்ளது.

இதன் ரியர் கேமரா செட்டப்பில் 12எம்பி டூயல்-லென்ஸ் சிஸ்டம் (12MP dual-lens system) உள்ளது, முன்பக்கத்தில் 12எம்பி ட்ரூடெப்த் செல்பீ கேமரா (12MP TrueDepth Front Camera) உள்ளது. இது உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைப்பற்ற அனுமதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஐபோன் 12 ஆனது டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங்கையும் (Dolby Vision HDR recording) ஆதரிக்கிறது, இது பயனர்கள் சிறப்பான தரத்துடன் வீடியோக்களை பதிவு செய்யவும், எடிட் செய்யவும் மற்றும் பிளேபேக் செய்யவும் அனுமதிக்கிறது. இந்த ஐபோன் ஏ14 பயோனிக் சிப் (A14 Bionic Chip) மூலம் இயக்கப்படுகிறது. இது மல்டி-டாஸ்கிங்கிற்கு ஏதுவான சிப்செட் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 12 ஆனது செராமிக் ஷீல்ட் தொழில்நுட்பத்தையும் (Ceramic Shield Technology) கொண்டு உள்ளது. இதன் விளைவாக நான்கு மடங்கு சிறந்த ட்ராப் பெர்ஃபார்மென்ஸை (Drop Performance) வழங்குகிறது. இது ஐபி68 வாட்டர் ரெசிஸ்டென்ட்டையும் (IP68 Water Resistant) கொண்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Buy Apple iPhone 12 At This Cheapest Price in Flipkart Big Billion Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X