அப்ளாஸ் வாங்க வரும் எச்டிசி ஸ்னாப் ஸ்மார்ட்போன்!

வாடிக்கையாளர்கள் இந்த மொபைலிலும் நிச்சயம் சிறந்த தொழில் நுட்பத்தினை எதிர் பார்க்கலாம். இந்த எச்டிசி ஸ்னாப் ஸ்மார்ட்போன் விண்டோஸ் 6.1 ஸ்டான்டர்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கியூவல்காம் 528 மெகாஹெர்ட்ஸ் எம்எம்எஸ் 7225 பிராசஸர் மூலம் எளிதாக இயங்கும்.
இந்த ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்பம் உள்ளதால் 3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இதன் திரை 2.4 இஞ்ச் கொண்டது. 2.0 மெகா பிக்ஸல் கேமரா இருப்பதால் இதன் அற்புதமான திரையில் புகைப்படத்தையும், வீடியோவினையும் தெளிவாக பார்க்க முடியும்.
எச்டிசி ஸ்னாப் மொபைலை பயன்படுத்தும்போது இன்னும் அதிக நேரத்தை செலவிட தூண்டும் என்ற எண்ணத்தை தூண்டும். இதில் கூகுள், சோஷியல் நெட்வொர்க் போன்ற வசதியினையும் பெற முடியும்.
தொழில் நுட்பங்கள் புதிதாக மாறினாலும், அதை பயன்படுத்த ஆர்வம் கொள்ளும் வாடிக்கையாளர்களின் எண்ணம் மாறுவதே இல்லை. இந்த புதிய எச்டிசி ஸ்னாப் மொபைல் பார்ப்பதற்கு, பிளாக்பெர்ரி கர்வ்-8900 மொபைலை போல உள்ளது.
எச்டிசி ஸ்னாப் மொபைல் அதிக தொழில் நுட்பம் கொண்டுள்ளதால், பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் ஈர்த்துவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த எச்டிசி ஸ்னாப் மொபைல் ரூ.22,000 விலையில் இந்திய சந்தையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications