கைக்கடிகார வடிவத்தில் புதிய மொபைல் போன்கள்!

நெதர்லாந்தைச் சேர்ந்த கடிகாரம் தயாரிக்கும் நிறுவனமான பர்க் இப்போது இந்தியாவில் புதுமையான வித்தியாசமான கைக்கடிகார மொபைல் போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கடிகார மொபைல் போன்களுக்கு பர்க் 9, பர்க் 10, பர்க் 11, பர்க் 12 மற்றும் பர்க் 13 என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.
தீவிரமான ஆராய்ச்சியின் விளைவாக இந்த கைக்கடிகார மொமைல் போன்கள் தயாரிக்கப்பட்டதாக பர்க் கூறுகிறது. இந்த கடிகார மொபைல் போன்கள் மிகவும் சிறியதாக இருக்கின்றன. ஆனால் இவை பலவகையான பணிகளைச் செய்யும் ஆற்றல் படைத்தவை.
குறிப்பாக இந்த கடிகார மொபைல்கள் அழைப்புகளை எடுக்கும், அழைப்புகளை விடுக்கும். மேலும் இது டெக்ஸ் மெசேஜ்களை பார்த்துக் கொள்ளும். மேலும் இதில் 500 வரை மொபைல் எண்களை சேமித்துக் கொள்ளலாம்.
இதன் உயர்தர மொபைல் மாடல்கள் இன்னும் அட்டகாசமான வசதிகளுடன் வருகின்றன. அதாவது மணிகள், விசில்கள், எம்பி3 ப்ளேயர், பைல் மேனேஜர், கால்குலேட்டர் மற்றும் டபுள்யுஎபி ப்ரவ்சர் போன்ற அம்சங்களை வழங்குகின்றன.
மேலும் இந்த கடிகார மொபைல்கள், ப்ளூடூத், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் வீடியோ பதிவு செய்யும் முகப்பு கேமரா போன்ற வசதிகளையும் வழங்குகின்றன. மேலும் கீறல் விழாத தொடுதளத்தையும் இந்த மொபைல்கள் கொண்டுள்ளன. ஆனால் இதில் உள்ள சாப்ட்வேர் பற்றித் தெரியவில்லை.
இந்த கடிகார மொபைல்கள் ரூ.9000 முதல் ரூ.24000 வரை விற்கப்படும்.


Click it and Unblock the Notifications