3 நாள் பேட்டரி ஆயுள்.. ரூ.9799க்கு கிடைக்கும் Nokia C21 Plus பயன்படுத்த எப்படி இருக்கு?

|

கீபோர்ட் போன்களில் கொடிகட்ட பறந்த நிறுவனம் நோக்கியா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனம் ஸ்மார்ட்போன் பிரிவில் தத்தளித்து வருகிறது. இருப்பினும் நிறுவனம் விடாமுயற்சியாக பல்வேறு புதுபுது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

சமீப காலமாகவே நோக்கியா நிறுவனம் பட்ஜெட் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி நிறுவனம் பட்ஜெட் விலையில் ஒரு ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. அதன் ரிவ்யூவை தான் பார்க்கப்போகிறோம்.

Nokia C21 Plus ரிவ்யூ..

Nokia C21 Plus ரிவ்யூ..

நோக்கியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Nokia C21 Plus ஸ்மார்ட்போன் குறித்து தான் பார்க்கப்போகிறோம். இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட அம்சங்களையும் இன்னும் மேம்பட்டிருக்கலாம் என்ற அம்சங்களையும் முதலில் பார்க்கலாம்.

நன்மைகள்

நன்மைகள்

உறுதியான வடிவமைப்பு

நீண்ட பேட்டரி ஆயுள்

சுத்தமான சாஃப்ட்வேர்

பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

இன்னும் மேம்பட்டிருக்கலாம்

சராசரியான காட்சி

அடிப்படையான கேமரா அமைப்புகள்

சிறந்த பயனர் அனுபவம்..

சிறந்த பயனர் அனுபவம்..

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் வாங்குபவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா சி21 ப்ளஸ் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் பிளிப்கார்ட்டில் ரூ.9799 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆரோக்கியமான பயனர் அனுபவங்கள் வழங்குவதை இலக்ககாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

பெரும்பாலான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை போன்றே இந்த ஸ்மார்ட்போனிலும் உயர்திறன் காட்சி மற்றும் சக்தி வாய்ந்த சிப்செட் இல்லை.

இருப்பினும் இதில் சிறந்த ஆண்ட்ராய்டு ஓஎஸ் அனுபவம் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

அதேபோல் இதில் உறுதியான வடிவமைப்பு மற்றும் நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுள் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனை எங்கள் குழுவினர் சோதனை செய்தனர். இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்த எப்படி இருக்கிறது என்ற விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

நோக்கியா சி21 ப்ளஸ் விலை..

நோக்கியா சி21 ப்ளஸ் விலை..

நோக்கியா C21 Plus ஆனது திடமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. சி21 ப்ளஸ் ஆனது IP52 மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. இதன்மூலம் வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு தன்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளது. அது க்ரே மற்றும் சியான் வண்ணங்கள் ஆகும்.

நோக்கியா சி21 ப்ளஸ் இன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.9,799 என்றும் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.11,049 எனவும் கிடைக்கிறது.

நோக்கியா சி21 ப்ளஸ் டிஸ்ப்ளே

நோக்கியா சி21 ப்ளஸ் டிஸ்ப்ளே

நோக்கியா சி21 ப்ளஸ் டிஸ்ப்ளே ஆனது 6.52 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த டிஸ்ப்ளே ஆனது 60Hz ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் HD+ ரெசல்யூஷன் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவின் வண்ணங்கள் கொஞ்சம் மந்தமானதாக இருக்கிறது. இதன் லுக் மிகவும் சராசரியாக இருக்கிறது.

எளிதாக சொல்லவேண்டும் என்றால் டிஸ்ப்ளே தரத்தில் கவனம் செலுத்துபவராக நீங்கள் இருந்தால் நோக்கியா சி21 ப்ளஸ் உங்களுக்கான தேர்வாக இருக்காது.

Nokia C21 Plus பயன்பாடு

Nokia C21 Plus பயன்பாடு

பெரும்பாலான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை போலவே, இதிலும் அடிப்படையான அன்றாட பணிகளை செய்யலாம். அதாவது வாய்ஸ் காலிங், சமூகவலைதளம், இணைய தேடல், UPI பணம் செலுத்துதல் போன்ற அனைத்து பயன்பாட்டுக்கும் ஏற்றதாக இருக்கிறது.

கேம்கள் விளையாடலாமா என்ற கேள்வி வந்தால், ஆம் விளையாடலாம். ஆனால் அடிப்படையான கேம்கள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோல் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் அடிப்படை அம்சங்களில் புகைப்படத்தை எடிட் செய்யலாம். காரணம் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலைக்கு ஏற்ற ஆக்டோகோர் யூனிசோக் SC9863A சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

Nokia C21 Plus பாதுகாப்பு அம்சம் மற்றும் ஓஎஸ்

Nokia C21 Plus பாதுகாப்பு அம்சம் மற்றும் ஓஎஸ்

நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மர்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இதன் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனை ஓபன் செய்யும் போது இந்த ஆதரவு மிகவும் வேகமாக வேலை செய்கிறது. மோனோ ஸ்பீக்கர் யூனிட் சப்-பார் ஆடியோ வசதி இதில் உள்ளது.

Nokia C21 Plus ஓஎஸ்

Nokia C21 Plus ஓஎஸ் விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 கோ ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இது ஸ்டாக் ஆண்ட்ராய்டு பயனர் ஆதரவைக் கொண்டுள்ளது. சீன உற்பத்தியாளர்கள் இந்த விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்களில் வழங்கும் ஓஎஸ்-களை விட நோக்கியாவில் வழங்கப்பட்டுள்ள இந்த ஓஎஸ் மேம்பட்டதாக இருக்கும். பேஸ்புக் லைட், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் மை ஜியோ ஆப் போன்ற சில முன்-நிறுவப்பட்ட செயலிகள் இதில் இருக்கிறது.

கோ பதிப்பில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குவதால் இதில் Go Gallery மற்றும் Go Assistant போன்ற Google பயன்பாடுகளின் லைட் பதிப்பு இதில் இருக்கிறது. YouTube மற்றும் Chrome போன்ற அத்தியாவசிய பயன்பாடுகளும் இதில் இருக்கிறது.

இரண்டு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் இரண்டு காலாண்டு மென்பொருள் மேம்படுத்தல்கள் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Nokia C21 Plus கேமரா அம்சங்கள்

Nokia C21 Plus கேமரா அம்சங்கள்

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை போன்ற பெரும்பாலான கேமரா அம்சங்கள் இதில் இருக்கிறது. இருப்பினும் கேமரா தரம் அந்த அளவிற்கு இதில் இல்லை. இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி டூயல் ரியர் கேமராக்கள் இருக்கிறது. முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாதரண புகைப்படம் எடுக்கும் தன்மை மட்டுமே இதில் இருக்கிறது.

இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. C21 Plus இல் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5MP முன்பக்க கேமரா இருக்கிறது.

மேம்படுத்த, பின்புற கேமரா HDR, போர்ட்ரெய்ட் பயன்முறை, பனோரமா பயன்முறை மற்றும் பியூட்டி அசிஸ்டென்ட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இருக்கிறது.

நன்கு வெளிச்சம் உள்ள சூழலில் நியாயமான முறையில் புகைப்படங்களை இதில் பதிவு செய்யலாம். 13 எம்பி கேமராவில் என்ன அம்சம் எதிர்பார்க்க முடியுமோ அது இதில் இருக்கிறது.

பேட்டரி ஆயுள்

பேட்டரி ஆயுள்

பேட்டரி ஆயுளை பொறுத்தவரை இதில் 5050 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சராசரியான அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

சார்ஜிங் செய்யாமலே ஒரு நாளுக்கும் அதிகமான பேட்டரி ஆயுளை இது வழங்கியது.

முழுமையாக சார்ஜ் செய்து குரல் அழைப்புகள், சமூகவலைதளம், சில கேமரா மேம்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தினோம் இதில் இதன் பேட்டரி ஆயுள் இரண்டரை நாட்கள் நீடித்தது.

ஸ்மார்ட்போன் புதிதாக வாங்கிய உடன் இரண்டரை மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

வாங்கலாமா, வேண்டாமா?

வாங்கலாமா, வேண்டாமா?

உறுதியான உருவாக்கத் தரம், நீண்ட கால பேட்டரி ஆயுள் போன்ற பல அம்சங்கள் இதில் இருக்கிறது. அடிப்படையான அம்சங்களுடன் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டால் அதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Budget-priced Nokia C21 Plus Review- Worth the price?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X