127 மணிநேர பேட்டரி பேக்அப்- ரூ.15,000க்குள் அறிமுகமாகும் iQoo Z6 Lite 5G!

|

iQoo Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது இந்தியாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

iQoo Z6 Lite 5G இன் டிஸ்ப்ளே 1,080x2,408 பிக்சல்கள் தீர்மானத்துடன் ஆன்லைன் சான்றிதழ் தளங்களில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

பட்ஜெட் விலைப்பிரிவில் கிடைக்கும் பல ஸ்மார்ட்போன்களுக்கு இது பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

விவோவின் துணை பிராண்டான ஐக்யூ புதிய ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை அறிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ப்ளே கன்சோலில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் அம்சங்கள் குறித்த தகவலும் கசிந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 எஸ்ஓசி ஆதரவு

குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 எஸ்ஓசி ஆதரவு

பட்டியலிடப்பட்ட iQoo Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது மாடல் எண் I2208 உடன் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm SM4375 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 6ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது ஸ்மார்ட்போனின் தொடக்க வேரியண்ட் ஆக இது இருக்கலாம் என சில தகவல்கள் குறிப்பிடுகிறது.

குறிப்பிட்டுள்ள குவால்காம் சிப்செட் ஆனது Snapdragon 4 Gen 1 SoC ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

iQoo Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது Funtouch OS 12 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

வெளியான தகவலில் டிஸ்ப்ளே குறித்து சிலவையும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 440 ppi பிக்சல் அடர்த்தியுடன் கூடிய 1,080x2,408 பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ஐக்யூ நிறுவனம் முன்னதாகவே iQoo Z6 Lite 5G குறித்த சில அம்சங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும் எனவும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் பேட்டரி 127 மணிநேர மியூசிக் ப்ளே ஆதரவை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

iQoo Z6 Lite 5G இந்தியாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. ஐ ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு கொண்ட 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கும் என கூறப்படுகிறது.

டிஸ்ப்ளே ஆதரவை பொறுத்தவரை 240Hz டச் மாதிரி விகிதத்துடன் 120Hz ரெஃப்ரஷிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

பிரத்யேக மைக்ரோ சைட்

பிரத்யேக மைக்ரோ சைட்

இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கும் என்பது இதன் பெயர் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் சாதனம் அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படும் என்றும், அமேசான் தளம் வழியாக முதலில் இந்த சாதனம் விற்பனைக்கு கிடைக்குமென்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து அமேசானில் இந்த ஸ்மார்ட்போனுக்கு என பிரத்யேக மைக்ரோ சைட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வசதி

வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வசதி

இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கும் என்பதும் போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் என்பதை அமேசான் தகவல் தெரிவிக்கிறது.

அதேபோல் முன்னதாக வெளியான சில தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6.58' இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனவும் Qualcomm Snapdragon 680 சிப்செட் உடன் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனின் விலை என்ன?

புதிய ஸ்மார்ட்போனின் விலை என்ன?

கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP சென்சார் கொண்ட டூயல் கேமரா அமைப்புடன் வரலாம். முன்பக்கத்தில், 8MP செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்ப்படுகிறது. இந்த போனின் விலை பற்றிப் பேசுகையில், இது ரூ.15,000க்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

இவை அனைத்தும் தகவலே என்பதால் செப்டம்பர் 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது முழு அம்சங்களையும் அறிந்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Budget Priced iQoo Z6 Lite 5G Smartphone Set to Launch on September 14

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X