Just In
- 4 min ago
தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் ஜியோ, ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- 1 hr ago
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- 15 hrs ago
இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!
- 16 hrs ago
நம்பர் 1 யாருனு இப்ப தெரியும்: மொத்த போனுக்கும் ஆப்பு வைக்கும் புதிய Xiaomi போன்!
Don't Miss
- News
குறுகலான சந்தில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்.. வயிற்றில் சொருகிய ‘அடிபம்பு’ கைப்பிடி.. கொடூரம்!
- Movies
பேசாம கிளாமர் டிரஸ்ஸே போட்டிருக்கலாம்...ஐஸ்வர்யா மேனனின் ஹாட் போட்டோஸ்!
- Lifestyle
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லாரோட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
2023 அனைவருக்கும் சொந்தம்: ரூ.10,000க்கு C50 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் Poco!
Poco C50 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் பிளிப்கார்ட் மூலம் இது விற்பனை்கு கிடைக்கும் எனவும் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நுழைவு நிலை ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் இன்னும் சில நாட்கள் மட்டும் காத்திருப்பது நல்லது. அது ஏன் என இந்த தகவலை பார்த்தால் உங்களுக்கே புரியும்.
ஓஹோனு இருந்த ஸ்மார்ட்போன் துறை
2022 எந்த துறை உகந்ததாக இருந்ததோ இல்லையோ ஸ்மார்ட்போன் சந்தை என்பது சீரும் சிறப்புமாக இருந்தது. 2022 இல் ஏணைய ஸ்மார்ட்போன்கள் புதுப்புது அம்சங்களோடு அறிமுகமானது. மேலும் சொல்லவேண்டும் என்றால் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் ஆண்டாகவே 2022 அமைந்தது. சரி, 2022 மட்டும் தான் இப்படி என்றால். 2023 பிறப்பதற்கு முன்பே ஏணைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கிறது.

வரிசைக்கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்
2023 ஜனவரி மாதம் ஏணைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கிறது. குறிப்பாக ரெட்மி நோட் 12 சீரிஸ், ரெட்மி ஜிடி நியோ 5, ஐக்யூ 11 என ஏணைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கின்றன. இந்த வரிசையில் இணைந்திருக்கிறது போக்கோ சி50 ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல்கள் குறிப்பிடுகிறது. அதன்படி போக்கோ சி50 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் பிளிப்கார்ட் மூலம் இது விற்பனைக்கு கிடைக்கும் என்பதும் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்டது.
போக்கோ சி50
Poco C50 ஸ்மார்ட்போனின் டீசர் இ-காமர்ஸ் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் வெளியீட்டு தேதி விரைவில் நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ சி50 ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவித்தாலும் இது ஜனவரி 3 ஆம் தேதியே அறிமுகமாகும் என 91மொபைல்ஸ் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
நட்சத்திர கேமரா செயல்திறன்
நிறுவனம் நேரடியாக சி50 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து போக்கோ கூறிய தகவல் தான் வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. "நட்சத்திர கேமரா செயல்திறன், அதிவேக மல்டிமீடியா அனுபவம், நேர்த்தியான வடிவமைப்புடன் நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் பல" என போக்கோ இந்த ஸ்மார்ட்போன் குறித்து குறிப்பிட்டது. போனின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த எந்த தகவலையும் நிறுவனம் பகிரவில்லை. ஆனால் Poco C40 மாடலைப் போன்ற சில விவரக்குறிப்புகள் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Poco C40
Poco C40 ஸ்மார்ட்போன் போன்றே சி50 இருக்கும் என கூறப்படும் காரணத்தால போக்கோ சி40 இன் அம்சங்களை பார்க்கலாம். Poco C40 இல் HD+ தெளிவுத்திறன் உடன் கூடிய பெரிய 6.71 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டா கோர் JLQ JR510 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ சி50 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13 எம்பி பிரதான கேமரா
Poco C40 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு இருக்கிறது. இதன்மூலம் 1டிவி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
6000 எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பேட்டரி ஆகும். இந்த போக்கோ ஸ்மார்ட்போனானது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பெரியளவிலான 6000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது ஆனால் இதை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு மட்டுமே இடம்பெற்றுள்ளது. எனவே இதை சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும்.
அமோக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பு
இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே போக்கோ சி50 மலிவு விலையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாகவே இந்தியாவை பொறுத்தவரை பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளம் இருக்கிறது. எனவே இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போனுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470