அதிகரிக்கும் போட்டியின் எதிரொலி: விலை குறைப்பை அறிவித்த Redmi.. மலிவு விலையில் வாங்கலாம்!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இருக்கும் போட்டிகள் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் இந்திய சந்தையை ஆக்கிரமித்து கொடிக்கட்டி பறந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ரெட்மி சமீபகாலமாக தொய்வு நிலையை சந்தித்து வருகிறது. இதை சரிசெய்யும் விதமாக Redmi நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அடியெடுத்து வைத்து 8 ஆண்டுகள் நிறைவு

அடியெடுத்து வைத்து 8 ஆண்டுகள் நிறைவு

ரெட்மி நோட் 11 இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றிருக்கிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் தற்போது பல தளங்களில் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த விலைக் குறைப்பு குறிப்பிட்ட காலத்துக்கானதா என்பது தற்போது தெரியவில்லை. நேற்றுடன் ரெட்மி நோட் சீரிஸ்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதுவே இந்த ஸ்மார்ட்போன் விலை குறைப்புக்கான காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Redmi Note 11 சீரிஸ் விலை

Redmi Note 11 சீரிஸ் விலை

Redmi Note 11 சீரிஸ் இல் மொத்தம் மூன்று வேரியண்ட்கள் இருக்கிறது. இந்த அனைத்து மாடல்களும் ரூ.500 வரை தள்ளுபடியை பெற்றுள்ளன. அதன்படி ரெட்மி நோட் 11 விலை ரூ.13,499 முதல் கிடைக்கத் தொடங்கிய நிலையில் தற்போது ரூ.12,999 என கிடைக்கிறது. இதன் அடிப்படை வேரியண்ட் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் இல் கிடைக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.13,499 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.14,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ரெட்மி நோட் 11 தள்ளுபடி

ரெட்மி நோட் 11 தள்ளுபடி

இந்த விலைகள் அமேசான் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Mi.com இணையதளத்தில் நேரலையில் உள்ளன. Flipkart இல் இந்த அடிப்படை மாடல் ஆனது இன்னும் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதாவது ரெட்மி நோட் 11 இன் அடிப்படை வேரியண்ட் பிளிப்கார்ட்டில் ரூ.12,799 என கிடைக்கிறது. Mi.com இல் ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட்களுக்கு ரூ.1000 பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி எம்ஐ.காம் தளத்தில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,999 என வாங்கலாம்.

கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்

கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்

Redmi Note 11 ஸ்மார்ட்போனானது 4ஜி ஆதரவைக் கொண்ட சாதனமாகும். இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை வரம்பில் 5ஜி போனே கிடைக்கிறது, எனக்கு 5ஜி அவ்வளவு அவசியம் இல்லை என முடிவெடுத்தவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

இந்த ஸ்மார்ட்போனானது பெரிய அளவிலான டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன் கேமரா அம்சங்களும் மேம்பட்ட வகையில் இருக்கிறது. பட்ஜெட் விலை போன்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது.

50 எம்பி குவாட் ரியர் கேமரா

50 எம்பி குவாட் ரியர் கேமரா

Redmi Note 11 ஆனது இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. 13 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது. IP53 மதிப்பீட்டையும் பெற்றிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 11 அம்சங்கள்

ரெட்மி நோட் 11 அம்சங்கள்

இதன் அம்சங்களை விரிவாக பார்க்கலாம், ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11.

பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள்

பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள்

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இவற்றுள் அடக்கம். 4ஜி எல்இடி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 195 கிராம் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Budget Price Smartphone Available at Low price: Redmi Note 11 gets a Price Cut in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X