12 நாள் மட்டும் காத்திருங்கள்.. மலிவு விலையில் தரமான அம்சங்களுடன் அறிமுகமாகும் Poco C50!

|

நவம்பர் மாத கடைசியில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக Poco C50 அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு காலவரிசையை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாகும் என்பதும் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்டது.

விரைவில் இந்தியாவில் Poco C50

விரைவில் இந்தியாவில் Poco C50

Poco C50 விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக நவம்பர் மாக கடைசியில் இது அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இந்த மாத கடைசியில் அறிமுகம் என்பது மட்டுமே தெரிவிக்கப்படுகிறது போக்கோ சி50 இன் சரியான வெளியீட்டுத் தேதியை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனம் Poco C40 ஐ உலக சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.

எதிர்பார்ப்புடன் வாடிக்கையாளர்கள்

எதிர்பார்ப்புடன் வாடிக்கையாளர்கள்

நிறுவனம் நேரடியாக சி50 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து போக்கோ கூறிய தகவல் தான் வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. " நட்சத்திர கேமரா செயல்திறன், அதிவேக மல்டிமீடியா அனுபவம், நேர்த்தியான வடிவமைப்புடன் நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் பல" என போக்கோ குறிப்பிட்டுள்ளது.

போனின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த எந்த தகவலையும் நிறுவனம் பகிரவில்லை. ஆனால் Poco C40 மாடலைப் போன்ற சில விவரக்குறிப்புகள் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.71 இன்ச் டிஸ்ப்ளே

6.71 இன்ச் டிஸ்ப்ளே

Poco C40 ஸ்மார்ட்போன் போன்றே சி50 இருக்கும் என கூறப்படும் காரணத்தால போக்கோ சி40 இன் அம்சங்களை பார்க்கலாம். Poco C40 ஆனது HD+ தெளிவுத்திறன் உடன் கூடிய பெரிய 6.71 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டா கோர் JLQ JR510 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ சி50 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13 எம்பி பிரதான கேமரா

13 எம்பி பிரதான கேமரா

Poco C40 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு இருக்கிறது. இதன்மூலம் 1டிவி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பேட்டரி ஆகும். இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனானது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

சார்ஜ் செய்ய அதிக நேரம்

சார்ஜ் செய்ய அதிக நேரம்

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பெரியளவிலான 6000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது ஆனால் இதை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு மட்டுமே இடம்பெற்றுள்ளது. எனவே இதை சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும்.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே போக்கோ சி50 மலிவு விலையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாகவே இந்தியாவை பொறுத்தவரை பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளம் இருக்கிறது.

சிறந்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பு

சிறந்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பு

இந்தியாவில் மலிவு விலை ஸ்மார்ட்போனுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக போக்கோவின் Poco C31 மற்றும் Poco C3 போன் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இந்த புதிய போக்கோ சி50 ஸ்மார்ட்போனும் நல்ல வரவேற்பை பெறும் எனவும் பிற மலிவு விலை ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Budget Price Poco C50 to be launched by the end of this month: Should you wait for this!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X