சரியான போடு.. மாதத்துக்கு வெறும் ரூ.166 போதும்.. ஒரு வருட வேலிடிட்டி.. டேட்டா.. வாய்ஸ்.. ஓடிடி சந்தா!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு மிகுந்த லாபம் தரக்கூடிய வகையில், மாதத்துக்கு வெறும் ரூ.166 செலவில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையையும் 356 நாட்களுக்கு ஒரு திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனங்களின் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் கஸ்டமர்களும் ஓடிடி (OTT) மற்றும் ஆன்லைன் கேமிங் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். இதனால், டேட்டாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அதிகளவில் அறிமும் செய்யப்படுகின்றன.

அந்த வரிசையில், மாதத்துக்கு வெறும் ரூ.166 செலவில் டேட்டா மட்டுமல்லாமல் மற்ற முக்கியமான சலுகைகள் அனைத்தையும் பிஎஸ்என்எல்லின் ரூ 1999 திட்டம் (BSNL Rs 1999 Plan) 365 நாட்களுக்கு வழங்குகிறது. அதேபோல டேட்டா மட்டுமே 365 நாட்களுக்கு வேண்டுமானால், ரூ 1515 விலையில் மற்றொரு திட்டமும் இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், மொத்தமாக 600 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
ஆகவே, ஒரு நாளைக்கு 1.5 ஜிபிக்கும் அதிகமான டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த 600 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி முடியும் முன்பே வாடிக்கையாளர்கள் பயன்படுத்திவிட்டால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த சலுகைகள் போக ஈராஸ் நவ் என்டர்டெயின்மென்ட் ( Eros Now Entertainment) ஓடிடி தளத்தின் 30 நாளுக்கான சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதோடு லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content) சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது. அதே போல 30 நாட்களுக்கு பிஆர்பிடி (PRBT) ரிங்டோன் சலுகையும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களாகும்.
இதனை ரீசார்ஜ் செய்துவிட்டால், ஒரு வருடத்துக்கு எந்தவொரு ரீசார்ஜூம் தேவைப்படாது. இந்த திட்டத்தில் மொத்தமாக டேட்டா வழங்கப்படுவதால், ஓடிடி மற்றும் ஆன்லைன் கேமிங் பிரியர்களுக்கும், வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் நபர்களுக்கும் இந்த 365 நாட்கள் திட்டம் நல்ல சலுகைகளை கொடுக்கூடியதாக இருக்கும்.
இந்த திட்டத்தைப் போலவே ஒரு வருட வேலிடிட்டியுடன் மற்றொரு திட்டம் இருக்கிறது. ஆனால், அதில் டேட்டா சலுகை மட்டும் கொடுக்கப்படுகிறது. பிஎஸ்என்எல் ரூ 1515 திட்ட விவரங்கள் (BSNL Rs 1515 Plan Details): இந்த திட்டம் டேட்டா சலுகையை மட்டுமே கொடுக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது.
இருப்பினும், இந்த திட்டத்துக்கு முந்தைய திட்டத்தைப் போலவே 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த 365 நாட்களில், நளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா உங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த டேட்டாவை முற்றிலும் பயன்படுத்தி விட்டாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டம் டேட்டா வவுச்சர் மட்டுமே என்பதால், உங்களிடம் பேஸ் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Base Active Prepaid Plan) இருக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி இருப்பதால், இன்கமிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கான வேலிடிட்டி ஒரு வருடத்துக்கு உங்களுக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








