பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் ரூ.155 ரீசார்ஜ் திட்டம்.!
இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 21 நாட்கள் வழங்கப்படுகிறது, அதேபோல் ரூ.68 சலுகைக்கு 2ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல நிறுவனம் தற்சமயம் புதிய ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களும் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.149 திட்டத்தில் 1.5ஜிபி டேட்டா வீதம் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இந்த திட்டத்திற்கு போட்டியாக தான் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 17 நாட்களுக்கு 34ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் பிஎஸ்என்எல் அறிவித்த சலுகைகளைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.14 மற்றும் ரூ.40 திட்டங்கள்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.14 திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது, குறிப்பாக முன்பு வழங்கப்பட்டதை விட இருமடங்கு அதிகம் ஆகும். இதே போல் ரூ.40 திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஐந்து நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல ரூ.57 மற்றும் ரூ.68 திட்டங்கள்:
இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 21 நாட்கள் வழங்கப்படுகிறது, அதேபோல் ரூ.68 சலுகைக்கு 2ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.78, ரூ.82, ரூ.85 திட்டங்கள்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.78 திட்டத்தில் 4ஜிபி டேட்டா மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.82 திட்டத்தில் 4ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.85 திட்டதில் 5ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications