"தேசத்தின் 4ஜி போன்" என்றழைக்கப்படும் பாரத்-1 ரூ.2,200/-க்கு அறிமுகம்; ஜியோ போனிற்கு டாட்டா.!

|

பி.எஸ்.என்.எல் மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் "தேசத்தின் 4ஜி போன்" என்று அழைக்கப்படும் பாரத்-1 அறிமுகமாகியுள்ளது.

4ஜி அம்சம் கொண்ட இயக்கருவு சமீபத்தில் வெளியான ஜியோ போனிற்கு கடும் போட்டியை விளைவிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

மேலும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில் ஏர்டெல் னநிறுவனத்துடன் இணைந்து அதன் கார்போன் ஏ40 இந்தியன் ஸ்மார்ட்போனை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"வரம்பற்ற" அதிவேக தரவு.!

தற்போது வெளியாகியுள்ள புதிய பாரத் -1 ஆனது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் "வரம்பற்ற" குரல் அழைப்புகள் மற்றும் "வரம்பற்ற" அதிவேக தரவு ஆகியவைகளை வெறும் ரூ,97/-க்கு வழங்கும்.

அக்டோபர் 20 விற்பனை.!

அக்டோபர் 20 விற்பனை.!

'தேஷ் கா 4ஜி போன்' அதாவது தேசத்தின் 4ஜி போன் என்றழைக்கப்படும் பாரத் -1 வரும் வெள்ளிக்கிழமை முதல் (அக்டோபர் 20) சில்லறை விற்பனை கடைகளின் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்.!

க்வால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்.!

ரூ.2,200/- என்ற விலை நிர்ணயத்தை பெற்று, ஒரு நிலையான பீச்சர் போனாக காட்சியளிக்கும் மைக்ரோமேக்ஸ் பாரத் -1, 4ஜி வோல்ட் ஆதரவுடனான க்வால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு இயங்கும்.

2000எம்ஏஎச் பேட்டரி.!

2000எம்ஏஎச் பேட்டரி.!

கேமரா துறையை பொறுத்தமட்டில், பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா, மற்றும் முன்பக்கம் விஜிஏ செல்பீ கேமரா கொண்டுள்ளது. இது 2000எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

22 உள்ளூர் மொழிகளுக்கு ஆதரவு.!

22 உள்ளூர் மொழிகளுக்கு ஆதரவு.!

டூயல் சிம் ஆதரவு கொண்ட இக்கருவி 22 உள்ளூர் மொழிகளுக்கு ஆதரவளிக்கிறது, மேலும் 100 நேரடி தொலைக்காட்சி சேனல்களுக்கு வாங்குபவர்களுக்கான அணுகல் வசதியும் கொண்டுள்ளது.

60 சதவீத விலைக்குறைப்பு.!

60 சதவீத விலைக்குறைப்பு.!

முன்னர் வெளியான கார்போன் ஏ40 இந்தியன் ஸ்மார்ட்போன் சுமார் 60 சதவீத விலைக்குறைப்பை பெற்று தற்போது ரூ.1,399/-க்கு கிடைக்கிறது. ஒரு மாதம் ரூ.169/- ரீசார்ஜ் செய்ய ஏர்டெல் வழங்கும் நன்மைகளை வாடிக்கையாளர்கள் அணுகலாம்.

Best Mobiles in India

English summary
BSNL, Micromax Launch Bharat-1, a Rs. 2,200 Jio Phone Rival With Unlimited Data & Calls. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X