வெறும் ரூ.4999/-க்கு பேஸ் அன்லாக்; சியோமியை ஓட விட்ட இந்திய நிறுவனம்.!
அதாவது 8 மொபைல்களுமே அல்லது ஸ்மார்ட்போன்களுமே சூப்பர் பட்ஜெட் விலை நிர்ணயத்தை கொண்டுள்ளன என்று அர்த்தம்.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ப்ரிட்ஸோ எனப்படும் ஒரு புதிய நிறுவனத்தின் கீழ் "ஐவிஓஓ" என்கிற ஒரு பிராண்ட் அறிமுகமாகியுள்ளது. நேற்று (செவ்வாயன்று) நடந்த இந்நிறுவனத்தின் வெளியீட்டு நிகழ்வில், BEATZ, PRIMO, SELFEE, TUFF, மற்றும் VOLT என்கிற ஐந்து தயாரிப்பு பிரிவுகளின் கீழ் மொத்தம் எட்டு ஸ்மார்ட் 2ஜி பீச்சர் போன்கள் அறிமுகமானது. இது "மேக் இந்த இந்தியா" முன்முயற்சியின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியான அத்தனை மொபைல்களுமே ரூ.649/- தொடங்கி ரூ.5,999/- வரை என்கிற புள்ளிக்குள் விலை நிர்ணயத்தை கொண்டுள்ளன. அதாவது 8 மொபைல்களுமே அல்லது ஸ்மார்ட்போன்களுமே சூப்பர் பட்ஜெட் விலை நிர்ணயத்தை கொண்டுள்ளன என்று அர்த்தம்.

போன்-பேஸ்டு வாட்ஸ்ஆப்.!
அம்சங்களை பொறுத்தவரை, 22 இந்திய மொழிகளுக்கான (பன்மொழி) ஆதரவு, போன்-பேஸ்டு (மொபைல் அடிப்படையிலான) வாட்ஸ்ஆப், Wi-Fi இணைப்பு, பேஸ் ரிகக்கனைசேஷன் (முக அங்கீகாரம்) மற்றும் shatterproof ஸ்மார்ட்போன் ஸ்க்ரீன்ஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களும் இந்திய கிராமப்புற மக்களை இலக்காக கொண்டுள்ளதை வெளிப்படையாக உணர முடிகிறது.

டிஜிட்டல் மயமாக்ககும் ஒரு பிராண்ட்.!
"கிராமப்புற நுகர்வோரின் அவசியங்களை ஆராய்ந்து, அதனை அங்கீகரிக்கும் மற்றும் அதே சமயம் பாரம்பரிய மொபைல் போன்களின் மற்றொரு புதிய பரிணாமத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ் தான் BRITZO மொபைல்கள் உருவாக்கம் பெற்றுள்ளன. BRITZO நிறுவனமானது, கிராமப்புற இந்தியாவை மேலும் டிஜிட்டல் மயமாக்ககும் ஒரு பிராண்ட் ஆக உருவாகி வருவதாக நாங்கள் நம்புகிறோம்" என்று BRITZO நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஆன ப்ரதிப்டோ கங்குலி தெரிவித்துள்ளார்.


8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 8 எம்பி பின்பக்க கேமரா.!
வெளியான 8 மொபைல்கள் தவிர்த்து, "ஸ்கிப்பர்" எனப்படும் நிறுவனத்தின் முதல் 4ஜி ஸ்மார்ட்போனையும், "ஸ்ட்ராம்" தொடரின் கீழ் இரண்டு ஆண்ட்ராய்டு கோ 4ஜி ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்ய ப்ரிட்ஸோ திட்டமிட்டுள்ளது. "ஸ்டார்ம் லைட்" மற்றும் "ஸ்டார்ம் ப்ரோ" என்கிற பெயரை சுமக்கும் நிறுவனத்தின் 2 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன்களும் டூயல் பிளாஷ் கொண்ட 8எம்பி செல்பீ கேமரா மற்றும் ப்ளாஷ், ஆட்டோ-ஃபோகஸ், ஷட்டர் பிரவுன் ஸ்கிரீன் மற்றும் பேஸ் அன்லாக் ஆகிய அம்சங்களை கொண்ட 8 எம்பி பின்பக்க கேமராவும் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.4,999/- மற்றும் ரூ.5,999.!
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட "ஸ்டார்ம் லைட்" ஆனது ரூ.4,999/- என்கிற விலைக்கும், 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட "ஸ்ட்ராம் ப்ரோ" ஆனது ரூ.5,999/- என்கிற விலைக்கும் அறிமுகமாகும். நிறுவனத்தின் அசெம்பிளிங் யூனிட் ஆனது நொய்டாவில் அமைக்கப்படவுள்ளதாகவும், "மேக் இன் இந்தியா" முன்முயற்சியை நோக்கி ரூ.100 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








