சார்ஜர் இல்லாமல் ஐபோன்கள் விற்பனை செய்ய தடை: வசமாக சிக்கிய Apple நிறுவனம்.!

|

ஐபோன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஆப்பிள் (Apple) நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

பிரேசில்

பிரேசில்

இந்நிலையில் பிரேசில் நாட்டு அரசாங்கம் சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்யக்கூடாது என்று ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.அதேபோல் சார்ஜர் இன்றி விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் முழுமை பெறாத நிலையில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

பூமிக்கு வந்துட்டாங்க., இந்த ஆதாரம் போதுமா: கேமராவில் பதிவான ஏலியன் உருவம்?- ஆனா அங்க என்ன பண்றாங்க!பூமிக்கு வந்துட்டாங்க., இந்த ஆதாரம் போதுமா: கேமராவில் பதிவான ஏலியன் உருவம்?- ஆனா அங்க என்ன பண்றாங்க!

ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம்

ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம்

எனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு 2.38 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து இருப்பதோடு சார்ஜர் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்
12 மற்றும் அதற்கு பின்பு அறிமுகமான ஐபோன்களின் விற்பனையை நடத்தக் கூடாது என்று பிரேசில் நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் விண்டோஸ் பிசி-யில் உங்கள் விண்டோஸ் பிசி-யில் "மறைந்து இருக்கும்" வைஃபை பாஸ்வேர்ட்-ஐ கண்டுபிடிப்பது எப்படி?

அத்தியாவசியமான சாதனம்

அத்தியாவசியமான சாதனம்

அனைத்து நிறுவனங்களும் சார்ஜர் உடன் போன்களை விற்பனை செய்கின்றன. ஆப்பிள் நிறுவனம் மட்டும் சார்ஜர் இல்லாமல் போன்களை விற்பனை செய்வது மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. மேலும் அந்நாட்டு அரசிதழில் மிகவும் அத்தியாவசியமான சாதனம் இன்றி ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குழப்பம் வேண்டாம் நாங்க இருக்கோம்: குழப்பம் வேண்டாம் நாங்க இருக்கோம்: "டாப் அம்சம்"., தொழில் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான சிறந்த லேப்டாப்கள்!

பிரேசில் நாட்டு அதிகாரிகள்

பிரேசில் நாட்டு அதிகாரிகள்

சார்ஜர் இன்றி ஐபோன் விற்பனை செய்வதால் காற்று மாசு குறைக்கப்படுவதாகக் கூறுகிறது ஆப்பிள் நிறுவனம். ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பிரேசில் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சார்ஜர் இன்றி போன்கள்

அதேபோல் சார்ஜர் இன்றி போன்கள் விற்பனை செய்வதால் சுற்றுச்சுழுலுக்கு பாதுகாப்பு என்பதை உணர்த்தவும் எந்த ஆதாரமும் இல்லை என அந்நாட்டுஅதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

செல்பி கேமரா பிரிவில் ஒரு புரட்சி: மேம்பட்ட கேமராவுடன் வரும் ஐபோன் 14- எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் தகவல்!செல்பி கேமரா பிரிவில் ஒரு புரட்சி: மேம்பட்ட கேமராவுடன் வரும் ஐபோன் 14- எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் தகவல்!

ஐபோன் 14 சீரிஸ்

ஐபோன் 14 சீரிஸ்

மேலும் இன்று இரவு ஆப்பிள் நிறுவனம் ஃபார் அவுட் நிகழ்வில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் இந்நிறுவனத்திற்கு எதிராக பிரேசில் அரசு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது. குறிப்பாக இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் சார்பில் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டைமன்சிட்டி 700 சிப் ஆதரவோடு அறிமுகமான ரியல்மி வி20 5ஜி- பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்: ஆனா ஒரு டுவிஸ்ட்!டைமன்சிட்டி 700 சிப் ஆதரவோடு அறிமுகமான ரியல்மி வி20 5ஜி- பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்: ஆனா ஒரு டுவிஸ்ட்!

ஐபோன் 14 மேக்ஸ்

ஐபோன் 14 மேக்ஸ்

குறிப்பாக இன்று நடைபெறும் நிகழ்வில் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் ப்ரோ, ஐஃபோன் 14 ப்ரோ மேக்ஸ் என்ற நான்கு புதிய மாடல்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த போன்களில் பல புதிய அம்சங்கள் இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!

A16 பயானிக் சிப்

A16 பயானிக் சிப்

அதேபோல் இன்று அறிமுகமாகும் சில ஐபோன்கள் ஆப்பிளின் புதிய வகை பிராசஸர் ஆன A16 பயானிக் சிப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த சிப் தரமான வசதிகளை வழங்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Brazil government orders Apple to stop selling iPhones without chargers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X