NOKIA நியூ இயர் ஆஃபர்! Gorilla Glass 3 டிஸ்பிளே, IP52 ரேட்டிங், 5000mAh பேட்டரி.. எல்லாமே வெறும் ரூ.12499க்கு!
நோக்கியா (Nokia) நிறுவனத்தின் பெஸ்ட்-செல்லிங் மற்றும் பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன், தற்போது அசல் விலையை விட மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. அதென்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? ஆஃபர் விலை என்ன? அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? தற்போது ஆஃபர் விலையில் விற்பனை செய்யப்படுவது நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஸ்மார்ட்போன் தான். நினைவூட்டும் வண்ணம் இது 6ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி என மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமானது.

அசல் விலை என்ன? ஆஃபர் விலை என்ன? சுவாரசியமாக நோக்கியா ஜி42 5ஜி-யின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் ரூ.500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.12,999 க்கு பதிலாக ரூ.12,499 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.16,499 க்கும் வாங்க கிடைக்கும்.
இது நோக்கியா வலைத்தளம் வழியாக மட்டுமே அணுக கிடைக்கும் ஒரு கூப்பன் கோட் ஆஃபர் (Coupon Code Offer) ஆகும். நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்யும் போது "உங்களிடம் ப்ரோமோ கோட் உள்ளதா?" (Do you have a promo code?) என்று கேட்கப்படும். அங்கே OFFER500 என்கிற கோட்-ஐ உள்ளிடுவதன் மூலம் உங்களுக்கு ரூ.500 உடனடி தள்ளுபடி (Instant Discount) கிடைக்கும்.

நோக்கியா ஜி42 5ஜி-ஐ இப்போது நம்பி வாங்கலாமா? கண்டிப்பாக! ஏனென்றால்.. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இது 3 ஆண்டுகளுக்கான மாதாந்திர செக்யூரிட்டி அப்டேட்களையும் மற்றும் 2 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களையும் பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இது ரூ.12,499 க்கு ஏற்ற அம்சங்களை கொண்டுள்ளதா? இந்த ஸ்மார்ட்போன் விலையை மீறிய அம்சங்களை கொண்டுள்ளது என்றே கூறலாம். இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720 x 1,612 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 560 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.56-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது 5ஜி-க்கான ஆதரவவை வழங்கும் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட்டை பேக் செய்கிறது. இது அதிகபட்சமாக 6ஜிபி வரையிலான ரேம்-ஐ வழங்கும். இருப்பினும் 5ஜிபி விர்ச்சுவல் ரேம் வழியாக, இந்த நோக்கியா ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 11ஜிபி ஆக அதிகரிக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமரா + எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.
இந்த கேமரா செட்டப்பில் நைட் மோட் (Night mode), டார்க் விஷன் (Dark Vision), ட்ரைபாட் மோட் (Tripod mode), ஏஐ போர்ட்ரெயிட் (AI portrait), எச்டிஆர் உடனான 50எம்பி மோட் (50MP mode with HDR), பெர்சனலைஸ்டு வாட்டர்மார்க்ஸ் (Personalized watermarks), ஓஸோ 3டி ஆடியோ ரெக்கார்டிங் (OZO 3D Audio recording) போன்ற அம்சங்கள் உள்ளன.
பக்கவாட்டில் பிங்கர் ஃபிரிண்ட் சென்சார் உடன் வரும் நோக்கியா ஜி42 55ஜி ஸ்மார்ட்போனில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கும் உள்ளது, கடைசியாக இது 20W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இதை ஒருமுறை சார்ஜ் செய்தால், 3 நாட்கள் வரையிலான பிளேபேக் டைம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








