Home
Mobile

ஆஃபர்னாலும் ஒரு நியாயம் வேணாமா? அடிமட்ட விலைக்கு iPhone 13.. இவ்ளோ கம்மி விலைக்கா விக்குறது!

"உங்களால ஐபோனுக்கு உண்டான மரியாதை போச்சேடா!" என்று கூறுமளவிற்கு ஐபோன் 13 (iPhone 13) மீது இதுவரை இல்லாத அளவிலான ஆஃபர் (Offer) அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக இந்த ஆஃபர் பிரபல இ-காமர்ஸ் தளங்களான அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கிறது.

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் சற்றே பழைய மாடலான ஐபோன் 13, தற்போது மிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே ஐபோன் 13 மீது நேரடி தள்ளுபடி (Flat Offer), வங்கி சலுகை (Bank Offer) மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகையை (Exchange Offer) அறிவித்துள்ளன.

ஆஃபர்னாலும் ஒரு நியாயம் வேணாமா? அடிமட்ட விலைக்கு iPhone 13!

பிளாட் ஆஃபர்: ஐபோன் 13 ஆனது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டிலுமே ரூ.61,999 என்கிற ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் இதே மாடல் ரூ.69,900-க்கு விற்கப்படுகிறது. ஆக இ-காமர்ஸ் தளங்களில் ஐபோன் 13 மீது ரூ.7,901 என்கிற பிளாட் ஆஃபர் கிடைக்கிறது.

பேங்க் ஆஃபர்: ஐபோன் 13-ஐ வாங்குவதற்காக எச்டிஎப்சி (HDFC) வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் உங்களுக்கு கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஐபோன் 13-ன் விலையை ரூ.59,999 ஆக குறைக்க முடியும். இந்த வங்கி சலுகையை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலுமே கிடைக்கிறது.

எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்: உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில் ஆப்பிள் ஐபோன் 13-ன் இறுதி விலையை "அடிமட்ட லெவலுக்கு" குறைக்க முடியும். பிளிப்கார்ட்டில் அதிகபட்சம் ரூ.33,000 வரையிலான தள்ளுபடியும், அமேசானில் ரூ.22,950 வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும்.

தயவு செய்து மற்ற தளங்களுக்கு சென்று விட வேண்டாம். ஏனென்றால் மற்ற தளங்கள் ஐபோன் 13-ஐ அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன. க்ரோமா (Chorma) மற்றும் விஜய் சேலில் (Vijay Sale) முறையே ரூ.62,990 மற்றும் 62,900 க்கும், ரிலையன்ஸ் டிஜிட்டலில் (Reliance Digital) ரூ.64,900 க்கும் வாங்க விற்பனை செய்யப்படுகிறது.

சற்றே பழைய ஐபோன் 13-ஐ இப்போது நம்பி வாங்கலாமா? 2 காரணங்களை முன்வைத்து ஐபோன் 13-ஐ நம்பி வாங்கலாம். முதல் காரணம் - இது லேட்டஸ்ட் ஐபோன் 14-ஐ போலவே உள்ளது. குறிப்பாக செயல்திறனில் (Performance) எந்த மாற்றமும் இல்லை, ஏனெனில் இந்த 2 மாடல்களுமே ஒரே ஏ15 பயோனிக் சிப்பை (A15 Bionic Chip) பேக் செய்கின்றன.

இது தவிர்த்து இரண்டுமே டூயல் ரியர் கேமரா செட்டப், ஒரே மாதிரியான டிசைன் மற்றும் பேட்டரியை கொண்டுள்ளன. ஆப்பிள் நிறுவனமானது 6 வருடங்கள் பழைய ஐபோன் மாடலுக்கு கூட அப்டேட்களை வெளியிடுவதால் சாஃப்ட்வேர் அப்டேட் (Software Update) என்பது எப்போதுமே ஒரு பிரச்சினை அல்ல.

இரண்டாவது காரணம் - ப்ரோ மாடல்களுக்காக அதிகம் செலவழிக்க விரும்பாதவர்களுக்கான ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் ஐபோனை தேடுபவர்களுக்கு, ஐபோன் 13 ஆனது இன்னமும் ஒரு நல்ல தேர்வாகும். ஒரேயொரு குறை என்னவென்றால், ஐபோன் 13-ன் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இணைக்கப்படாது. எனவே ஒரு சார்ஜருக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

Best Mobiles in India

English summary
Both Amazon and Flipkart Selling Apple iPhone 13 in Very Low Price Check All The New Latest Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X