Home
Mobile

Phantom X2 Pro 5G போனின் முன்பதிவு தேதி அறிவிப்பு: எக்கச்சக்க சலுகைகளை வழங்கி தெறிக்கவிட்ட டெக்னோ.!

டெக்னோ நிறுவனம் சமீபத்தில் தான் Tecno Phantom X2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் Phantom X2 Pro 5G எனும் ஸ்மார்ட்போனை கூட விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது டெக்னோ நிறுவனம். வரும் ஜனவரி 17-ம் தேதி Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போனின் முன்பதிவு அமேசான் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுகளை வழங்க உள்ளது டெக்னோ

பரிசுகளை வழங்க உள்ளது டெக்னோ

Tecno Phantom X2 Pro ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் முதல் 600 பயனர்களுக்கு சில அசத்தலான பரிசுகளை வழங்க உள்ளது டெக்னோ நிறுவனம். பின்பு இந்த போனை முன்பு பதிவு செய்யும் பயனர்களுக்கு 5000 வரை தள்ளுபடி மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

Dimensity 9000 சிப்செட்

Dimensity 9000 சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனால் விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

புதிய Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா +50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

கொரில்லா கிளாஸ் விக்டஸ்

கொரில்லா கிளாஸ் விக்டஸ்

Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் இந்த போன் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

5160 எம்ஏஎச் பேட்டரி

5160 எம்ஏஎச் பேட்டரி

5160 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போன். எனவே இந்த போனில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன்.

ரூ.50,000-க்கு கீழ்..

ரூ.50,000-க்கு கீழ்..

5ஜி ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் ரூ.50,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Bookings for the new Tecno Phantom X2 Pro 5G phone will start on January 17: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X