பின்றானே இவன்.. வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை களமிறங்குவதில் புதிய நிறுவனமாக போல்ட் (Boltt) சேர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் போல்ட் ஈவோ (Boltt Evo) ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகி கஸ்டமர்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த போல்ட் ஈவோ ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை விவரங்களை பார்ப்போம்.
பட்ஜெட் மாடலாக இருந்தாலும், டிசைனில் அப்படி தெரியாத அளவுக்கு பிரீமியம் காட்டி இருக்கிறது. அதேபோல 50 எம்பி கேமராவை பேக் செய்துள்ளது. ஏனென்றால், இந்த பட்ஜெட்டுக்கு வழக்கமாக 13 எம்பி மெயின் கேமரா மட்டுமே கிடைக்கும். அதேபோல ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேக் செய்யப்பட்டு இருக்கிறது.

போல்ட் ஈவோ அம்சங்கள் (Boltt Evo Specifications): 6.79 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் யூனிசோக் டி7250 (Octa Core UNISOC T7250) சிப்செட்டை இந்த போல்ட் ஈவோ ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி ஏஐ செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் ரியல் டோன் (Real Tone) சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி ஏஐ மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) இந்த போல்ட் ஈவோ ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. ஏஐ பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த கேமராவுக்கு ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), ஏஐ நைட் மோட் (AI Night Mode) மற்றும் ஏஐ செல்பீ என்ஹான்ஸ்மெண்ட் (AI Selfie Enhancement) பீச்சர்கள் கிடைக்கின்றன. 6000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த போல்ட் ஈவோ கிடைக்க இருக்கிறது. இந்த மாடலுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்படவில்லை.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆகவும் இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.1,000 கம்மியாக கிடைக்க இருக்கிறது. ஆகவே, 4 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.9,999 விலைக்கும், 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.10,999 விலைக்கும் வாங்கலாம்.
செப்டம்பர் 21ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யலாம். இந்த போல்ட் ஈவோ ஸ்மார்ட்போனை ஆர்டிக் ஒயிட் (Arctic White), பெர்ரி ரெட் (Berry Red), லாவண்டர் ப்ளூம் (Lavender Bloom), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications