Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.8,549 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 2TB மெமரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 4 ஜிபி ரேம் கொண்ட போல்ட் ஈவோ (Boltt Evo) ஸ்மார்ட்போன் நம்ப முடியாத விலைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட் மாடல் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.8,999 ஆக இருக்கிறது. இந்த விலையே 50 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.450 தள்ளுபடியும் கிடைக்கிறது. இதையும் பெற்றால், ரூ.8,549 விலைக்கு இந்த போல்ட் ஈவோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

பொளக்குது விற்பனை.. ரூ.8,549 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா!

போல்ட் ஈவோ அம்சங்கள் (Boltt Evo Specifications): போல்ட் ஈவோ ஸ்மார்ட்போனில் 6.79 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஸ்கிரீனில் உள்ள கன்டென்ட்களை பட்ஜெட்டிலும் குவாலிட்டியாக பார்க்க முடியும்.

இந்த போல்ட் ஈவோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யூனிசோக் டி7250 (Octa Core UNISOC T7250) சிப்செட் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த மாடல் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இயங்குகிறது. இதனால், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான வசதிகளை இந்த போல்ட் ஈவோ ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும்.

மெமரி அப்கிரேட்டை பொறுத்தவரை, இந்த போல்ட் ஈவோ ஸ்மார்ட்போனில் 1 டிபி வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டை (microSD Card) பயன்படுத்தும்படி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நானோ சிம் கார்டுகளை பயன்படுத்துவதற்கான டூயல் நானோ சிம் ஸ்லாட் (Dual Nana SIM Slot) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கேமரா பீச்சர்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி ஏஐ மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த போட்டோக்களை எடுப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு ஏஐ கேமரா பீச்சர்களும் இடம்பெற்றுள்ளன. இதில் ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode) உள்ளது.

மேலும், ஏஐ நைட் மோட் (AI Night Mode) மற்றும் ஏஐ செல்பீ என்ஹான்ஸ்மெண்ட் (AI Selfie Enhancement) ஆகிய பீச்சர்களும் கிடைக்கின்றன. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி ஏஐ செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ரியல் டோன் (Real Tone) சப்போர்ட் இருப்பதால், போட்டோக்களை இயல்பான ஸ்கின் டோனில் எடுக்கலாம்.

பேட்டரி பீச்சர்களை பார்க்கையில், இந்த போல்ட் ஈவோ ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கமாக பயன்படுத்தும் ஆப்களுக்கான ஏற்ற பேட்டரி பேக்கப்பை இந்த மாடல் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் பெரிதாக கொடுக்கப்படவில்லை.

ஏனென்றால், அவ்வளவு மலிவான விலைக்கு கிடைக்கிறது. கலர் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, ஆர்டிக் ஒயிட் (Arctic White), பெர்ரி ரெட் (Berry Red), லாவண்டர் ப்ளூம் (Lavender Bloom), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) ஆகிய ஐந்து கலர்களில் இந்த போல்ட் ஈவோ ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Boltt Evo With 4GB RAM Available At Rs 8999 in Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X