தம்பி ரெட்மி கொஞ்சம் ஓரம்போ.. 64எம்பி கேமரா.. 6000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது Boltt 5ஜி போன்.. எந்த மாடல்?
ஃபயர்-போல்ட்டின் (Fire-Boltt) ஸ்மார்ட்போன் பிரிவான போல்ட் நிறுவனம் தனது புதிய போல்ட் ஏஸ் 5ஜி (boltt Ace 5G) போனை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் இந்த புதிய போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
போல்ட் ஏஸ் 5ஜி அம்சங்கள் (boltt Ace 5G Specifications): 6.79-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போல்ட் ஏஸ் 5ஜி மாடல் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளியாகும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த யுனிசாக் டி8200 (UNISOC T8200) சிப்செட் உடன் போல்ட் ஏஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் போல்ட் ஏஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
64எம்பி ரியர் கேமரா உடன் போல்ட் ஏஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), ஃபேஸ் அன்லாக் வசதியுடன் போல்ட் ஏஸ் 5ஜி போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போல்ட் நிறுவனம்.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய போல்ட் ஏஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் போல்ட் ஏஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போல்ட் ஏஸ் 5ஜி போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும். அதேபோல் ரெட்மி, மோட்டோ, ரியல்மி போன்ற நிறுவனங்களின் போன்களுக்கு போட்டியாக இந்த போல்ட் ஏஸ் 5ஜி போன் வெளியாகும்.


Click it and Unblock the Notifications