ஆரம்பமே அதிரடி ஆஃபர்.. நாளை விற்பனைக்கு வரும் புதிய போல்ட் 5ஜி போன்.. 64எம்பி கேமரா.. எந்த மாடல்?
போல்ட் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் போல்ட் ஏஸ் 5ஜி (boltt Ace 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த புதிய போல்ட் 5ஜி போன் நாளை (செப்டம்பர் 1) மதியம் 12 மணி அளவில் முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
போல்ட் ஏஸ் 5ஜி விலை
- 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட போல்ட் ஏஸ் 5ஜி மாடலின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் இந்த மாடலை அறிமுக சலுகையாக ரூ.12,999 விலையில் வாங்க முடியும்.
- 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போல்ட் ஏஸ் 5ஜி மாடலின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் இந்த மாடலை அறிமுக சலுகையாக ரூ.13,999 விலையில் வாங்க முடியும்.
- 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போல்ட் ஏஸ் 5ஜி மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. ஆனால் இந்த மாடலை அறிமுக சலுகையாக ரூ.14,999 விலையில் வாங்க முடியும்.

போல்ட் ஏஸ் 5ஜி அம்சங்கள் (boltt Ace 5G Specifications): யுனிசாக் டி8200 (UNISOC T8200) சிப்செட் உடன் போல்ட் ஏஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 6.79-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போல்ட் ஏஸ் 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி உடன் போல்ட் ஏஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
அதேபோல் 64எம்பி ரியர் கேமரா உடன் போல்ட் ஏஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), ஃபேஸ் அன்லாக் வசதியுடன் போல்ட் ஏஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போல்ட் நிறுவனம்.
புதிய போல்ட் ஏஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.

போல்ட் ஏஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. ஆர்டிக் ஒயிட் (Arctic White), பர்கண்டி Bliss, ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), லாவெண்டர் ப்ளூம், மிட்நைட் பிளாக் (Midnight Black), ஸ்கை ப்ளூ (Sky Blue) ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications