இந்தியாவில் வெளியாகும் நோக்கியா 6X-ன் அம்சங்கள் மற்றும் விலை.!
பார்ப்பதற்கு சமீபத்தில் வெளியான, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கும்.
நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனமானது, அதன் நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனை கடந்த மே மாதம் 16 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்தது. பார்ப்பதற்கு அட்டகாசமானதொரு ஹை-எண்ட் ஸ்மார்ட்போன் போன்று இருந்த நோக்கியா எக்ஸ்6 ஆனது மிட்-ரேன்ஜ் விலை பிரிவின் கீழ் வெளியாகுமென்று கூறும் போதும் அரங்கமே நம்பவில்லை, பின்னர் ஆர்ப்பரித்தது.!

பார்ப்பதற்கு சமீபத்தில் வெளியான, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கும் இந்த நோக்கியா 6எக்ஸ் ஆனது, ஐபோன் எக்ஸ்-ஐ போன்றே மேல்பக்க நாட்ச் வடிவமைப்பு மற்றும் பெஸல்லெஸ் டிஸ்பிளே ஆகியவைகளை கொண்டுள்ளது.

சேமிப்பு மாடல்
அதிகாரபூர்வமான வெளியீட்டு விலையின் படி, நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது (தோராயமாக) ரூ.13,800/-க்கும், 4 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.16,000/-க்கும் மற்றும் இறுதி மாறுபாடு ஆன 6 ஜிபி ரேம் + 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது ரூ.18,100/-க்கும் அறிமுகமாகி உள்ளன.

ரூ.20,000/-க்கு மேல் என்கிற விலை
சீனாவில் ரூ.20,000/-க்குள் வெளியாகியுள்ள இதே ஸ்மார்ட்போன், அதன் இந்திய வெளியீட்டை சந்திக்கும் போது, ரூ.20,000/-க்கு மேல் என்கிற விலை நிர்ணயத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த புள்ளியானது நோக்கியா 6.1 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலைப்புள்ளிக்கு இடையே வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது.
நோக்கியா 6எக்ஸ் ஆனது, தற்போது வரையிலான சீனாவில் மட்டுமே வாங்க கிடைக்கிறது என்பதால் பல வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். அதனை தொடர்ந்து, "சீனாவின் எல்லைகளுக்கு அப்பால் நோக்கியா 6 எக்ஸ்-ஐ பார்க்க விரும்புகிறீர்களா.?" என்று மக்களிடம் கேட்கும்படி ட்விட்டரில் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. அதன் முடிவுகள் உலக மாறுபாட்டிற்கு சாதகமாக உள்ளதால், அடுத்த மாதங்களில் அல்லது வாரங்களில் சீனாவுக்கு வெளியே நோக்கியா 6எக்ஸ் விற்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஒன்றாக வெளியாகலாம்
சமீபத்தில் ப்ளூடூத் சான்றிதழ் வலைத்தளங்களில் காணப்பட்ட நோக்கியா எக்ஸ்6 ஆனது, அதன் இரண்டு உலக மாறுபாடுகளை (மாடல் எண் TA-1083 மற்றும் TA-1116) வெளிப்படுத்தியுள்ளது. ஆக நோக்கியா 5.1 ப்ளஸ் ஆனது அதற்கான ப்ளூடூத் சான்றிதழை பெற்றவுடன், நோக்கியா 6 கேஸ் உடன் சேர்ந்து விரைவில் ஒன்றாக வெளியாகலாம் என்றும், நோக்கியா 6எக்ஸ்-ன் இதர அம்சங்களில் மாற்றங்கள் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

19: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம்
அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா X6 ஆனது 5.8 அங்குல FHD+ (1080 x 2280 பிக்சல்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 19: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம் மற்றும் 2.5 டி கர்வ்டு கிளாஸ் அமைப்பையும் கொண்டுள்ளது. இது சக்திவாய்ந்த க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 636 SoC சிப்செட் உடனான ஆக்டா-கோர் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை விரிவாக்கத்துடன் கூடிய, 6 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ளது.

16 எம்பி செல்பீ கேமரா
நோக்கியா எக்ஸ்6 ஆனது எச்டிஆர் மற்றும் பொக்கே மோட் ஆகிய திறன்களை உள்ளடக்கிய 16 எம்பி முதன்மை மற்றும் 5 எம்பி மோனோகிராம் சென்சார் என்கிற இரட்டை கேமரா கட்டமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எப் / 2.0 துளை உடனான ஒரு 16 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது பேஸ் அன்லாக் அம்சத்தை ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்
மேலும் இதன் கேமரா சிறந்த முடிவுகளை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட ஏஐ திறன்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக மிகவும் சிறப்பான கேமரா அம்சமான பொத்தீ ஆனது, நோக்கியா எக்ஸ்6-ல் இடம்பெற்றுள்ளது. இது ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்புற கேமராக்களை பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்க உதவும் ஒரு அம்சமாகும். இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, நோக்கியா எக்ஸ்6 ஆனது, இரட்டை சிம் ஆதரவு, 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளுடூத் வி5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ்
க்விக் சார்ஜ் 3.0 பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவு கொண்ட நீக்கமுடியாத லி-அயன் 3,060mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோக்கியா எக்ஸ் 6 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ்-ன் கீழ் இயங்குகிறது. இதன் இந்திய வெளியீடு எப்போது.? ப்ளூடூத் இணைப்பு போன்று, அம்சங்களில் வேறு ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா.? என்னென்ன சேமிப்பு மாடல்களில் வெளியாகும்.? விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.? போன்ற பல அப்டேட்ஸ்களுக்கு, தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications