13எம்பி செல்பீ கேம் & கைரேகை சென்சார் வசதியுடன் ப்ளூ ஆர்2 பிளஸ் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ப்ளூ நிறுவனம் அதன் புதிய ப்ளூ ஆர்2 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள முக்கிய சிற்பபம்சம் என்னவென்றால், கைரேகை சென்சார் வசதி இவற்றுள் அடக்கம். அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ப்ளூ ஆர்2 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ப்ளூ ஆர்2 பிளஸ் :
ப்ளூ ஆர்2 பிளஸ் சாதனம் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு:
ப்ளூ ஆர்2 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் 6753 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

உள்ளடக்க மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ப்ளூ ஆர்2 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் ப்ளூ ஆர்2 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
ப்ளூ ஆர்2 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.11.484-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications