அடிமாட்டு விலையில் களமிறங்கிய புதிய QLED டிவிகள்.. டால்பி ஆடியோ.. பெசல் லெஸ் டிசைன்.. எந்த மாடல்?
ப்ளூபங்க்ட் நிறுவனம் இந்தியாவில் ப்ளூபங்க்ட் ஜியோடெலி ஓஎஸ் கியூஎல்இடி டிவி (Blaupunkt JioTele OS QLED TV) மற்றும் ப்ளூபங்க்ட் சிக்மாகியூ கியூஎல்இடி டிவி (Blaupunkt SigmaQ QLED TV) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டிவிகள் தனித்துவமான அம்சங்களுடன் கம்மி பட்ஜெட்டில் வெளிவந்துள்ளன. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ப்ளூபங்க்ட் ஜியோடெலி ஓஎஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் ( Blaupunkt JioTele OS QLED TV Full Specifications): ப்ளூபங்க்ட் ஜியோடெலி ஓஎஸ் கியூஎல்இடி டிவி சீரிஸ் ஆனது 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் என மூன்று அளவுகளில் வாங்க கிடைக்கும். அதுவும் அலாய் ஸ்டாண்ட்ஸ் (alloy stands) மற்றும் பெசல் லெஸ் வடிவமைப்பு (Bezel-less design)உடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக ப்ளூபங்க்ட் ஜியோடெலி ஓஎஸ் கியூஎல்இடி டிவி சீரிஸ் ஆனது 4K கியூஎல்இடி டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் 450 நிட்ஸ் பிரைட்னஸ், ஸ்போர்ட்ஸ் மோட் (Sports mode) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
டால்பி டிஜிட்டல் மற்றும் டால்பி ஆடியோ அம்சங்களை கொண்டுள்ளன ப்ளூபங்க்ட் ஜியோடெலி ஓஎஸ் கியூஎல்இடி டிவி சீரிஸ். பின்பு இதன் 50-இன்ச் மற்றும் 55-இன்ச் டிவிகள் 48W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. ஆனால் இதன் 43-இன்ச் டிவி மாடல் மட்டும் 40W ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது.

அம்லாஜிக் சிப்செட் (Amlogic Chipset), 2ஜிபி ரேம், 8ஜிபி மெமரி, ஜியோடெலிஓஎஸ், ஹலோ வாய்ஸ் சர்ச், ஜியோ கேம்ஸ், ஜியோ ஸ்டோர், லைவ் டிவி சேனல், எச்டிஎம்எம் போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ப்ளூபங்க்ட் ஜியோடெலி ஓஎஸ் கியூஎல்இடி டிவி சீரிஸ் மாடல்களின் உள்ளன.
ப்ளூபங்க்ட் சிக்மாகியூ கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Blaupunkt SigmaQ Series QLED TV Specifications): ப்ளூபங்க்ட் சிக்மாகியூ கியூஎல்இடி டிவி சீரிஸ் ஆனது 24-இன்ச் எச்டி, 32-எச்டி, 40-இன்ச் ஃபுல் எச்டி என மூன்று அளவுகளில் வாங்க கிடைக்கும். பின்பு இந்த டிவிகள் பெசல்-லெஸ் டிசைன் மற்றும் கியூஎல்இடி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
அதுவும் 24-இன்ச் டிவி 24W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. பின்பு இதன் 32-இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்கள் மாடல் 36W ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளன. குறிப்பாக அம்லாஜிக் சிப்செட் (Amlogic Chipset) ஆதரவைக் கொண்டுள்ளன ப்ளூபங்க்ட் சிக்மாகியூ கியூஎல்இடி டிவி மாடல்கள். பின்பு Linux ஓஎஸ் மூலம் இந்த டிவிகள் இயங்குகின்றன.
4ஜிபி மெமரி, 512ஜிபி ரேம், எச்டிஎம்ஐ போர்ட் யுஎஸ்பி போர்ட் ஹெட்போன் ஜாக், ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi), ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) உள்ளிட்ட வசதிகள் இந்த ப்ளூபங்க்ட் சிக்மாகியூ கியூஎல்இடி டிவிகளில் உள்ளன. மேலும் இந்த டிவிகளில் அனைத்து முக்கிய ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும்.

விலை மற்றும் விற்பனை
செப்டம்பர் 22-ம் தேதி இந்த ப்ளூபங்க்ட் ஜியோடெலி ஓஎஸ் கியூஎல்இடி டிவி (Blaupunkt JioTele OS QLED TV) மற்றும் ப்ளூபங்க்ட் சிக்மாகியூ கியூஎல்இடி டிவி( Blaupunkt SigmaQ QLED TV) மாடல்கள் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும்.
ப்ளூபங்க்ட் 43-இன்ச் ஜியோடெலி ஓஎஸ் கியூஎல்இடி டிவி விலை ரூ.17,599-ஆக உள்ளது.
ப்ளூபங்க்ட் 50-இன்ச் ஜியோடெலி ஓஎஸ் கியூஎல்இடி டிவி விலை ரூ.21,999-ஆக உள்ளது.
ப்ளூபங்க்ட் 55-இன்ச் ஜியோடெலி ஓஎஸ் கியூஎல்இடி டிவி விலை ரூ.26,999-ஆக உள்ளது.
ப்ளூபங்க்ட் சிக்மாகியூ 24-இன்ச் கியூஎல்இடி டிவி விலை-ரூ.6,199
ப்ளூபங்க்ட் சிக்மாகியூ 32-இன்ச் கியூஎல்இடி டிவி விலை-ரூ.8,299
ப்ளூபங்க்ட் சிக்மாகியூ 40-இன்ச் கியூஎல்இடி டிவி விலை-ரூ.12,499


Click it and Unblock the Notifications








