2 டிஸ்பிளே.. உயரத்திலிருந்து விழுந்தா கூட உடையாது.. Budget-ல தரமான ரக்டு Mobile இதான்.. விலை என்ன அம்சம் என்ன?
பிளாக்வியூ (Blackview) நிறுவனம் மிகவும் உறுதியான ரக்டு ஸ்மார்ட்போன் (Rugged Smartphone) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இரண்டு டிஸ்பிளேவுடன் (Dual Display) அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சம் விபரங்களை பார்க்கலாம்.
இந்த புதிய பிளாக்வியூ சாதனம் பிளாக்வியூ ஓஸ்கல்பைலட் 2 (Blackview Oscal Pilot 2) என்ற பெயருடன் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் உறுதியான ஒரு ரக்டு ஸ்மார்ட்போன் சாதனமாகும். இந்த Blackview Oscal Pilot 2 ஸ்மார்ட்போன் சாதனம் டூயல் எல்இடி டிஸ்பிளேவுடன் (dual LED display) வருகிறது.

பிளாக்வியூ ஓஸ்கல்பைலட் 2 (Blackview Oscal Pilot 2):
இந்த புதிய பிளாக்வியூ ஓஸ்கல்பைலட் 2 (Blackview Oscal Pilot 2) ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களில் ஒன்று, இது நீருக்கடியில் மூழ்கினாலும் சிறப்பாக செயல்படும். அதேபோல், 1.2 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழும் பொழுதும் உடையாமல் உறுதியாக இருக்குமென்று பிளாக்வியூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளாக்வியூ ஓஸ்கல்பைலட் 2 (Blackview Oscal Pilot 2) ஸ்மார்ட்போனை -20ºC முதல் 60ºC வரையிலான வெப்பநிலை வரம்பிற்குள் கூட மக்கள் பயன்படுத்தலாம் என்று Blackview கூறுகிறது. ஆம், உறைபனி நிலைக்கும் அப்பாற்பட்டு இது எந்தவித கோளாறும் இல்லாமல் திறம்பட வேலை செய்கிறது. இப்படி ஒரு உறுதியான ஸ்மார்ட்போன் (strongest smartphone) சாதனத்தை யாரும் வேண்டாமென்று சொல்லமாட்டார்கள்.
இந்த புதிய பிளாக்வியூ ஓஸ்கல்பைலட் 2 ஸ்மார்ட்போன் சாதனத்தின் டிஸ்பிளே கூட உறுதியானது. காரணம், இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (corning gorilla glass 5 protection) பாதுகாப்புடன் வருகிறது. இது 6.5" இன்ச் உடன் 120 ஹெர்ட்ஸ் பேனலைக் கொண்டுள்ளது. இந்த முரட்டுத்தனமான ரக்டு ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 1080 x 2400 பிக்சல்கள் உடன் வருகிறது.

பிளாக்வியூ ஓஸ்கல்பைலட் 2 விலை மற்றும் சிறப்பம்சம் (Blackview Oscal Pilot 2 Price and Specifications):
இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்பிளே பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ரவுண்ட் வடிவ 1.3" இன்ச் டிஸ்பிளேவாகும். இது நோட்டிபிகேஷன் அறிவிப்புகளைக் காண்பிக்கப் பயன்படும். இந்த புதிய பிளாக்வியூ ரக்டு ஸ்மார்ட்போன் (Blackview rugged smartphone) மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஸ்மார்ட்போனுக்கு போதுமான சக்தியை வழங்குகிறது.
இருப்பினும் இதில் 5G இணைப்பு இல்லை. ஸ்மார்ட்போனின் ரேம் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் (Storage) பற்றி பேசுகையில், இந்த புதிய பிளாக்வியூ ஓஸ்கல்பைலட் 2 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மெமரி கார்டு வழியாக 2TB வரையிலான ஸ்டோரேஜ்ஜை விரிவாக்கக்கூடிய அம்சமும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 45W வரை சார்ஜ் செய்யக்கூடிய 8,800mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இதில் ஆஸ்கல் பைலட் 2 சாம்சங் ஐசோசெல் GN5 சென்சார் கொண்ட 50MP பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. அதே சமயம், இதன் எல்இடி லைட் 170 லுமன்ஸ் பிரகாசத்தையும் 18 மீட்டர் வரம்பையும் கொண்டுள்ளது. பிளாக்வியூ ஓஸ்கல்பைலட் 2 ஸ்மார்ட்போன் 368 கிராம் எடையும் 17மிமீ தடிமன் கொண்டது. இது மிலிட்டரி கிரேட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
பிளாக்வியூ ஓஸ்கல்பைலட் 2 ஸ்மார்ட்போன் விலை $279.99 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 23,000 விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளாக்வியூ ஓஸ்கல்பைலட் 2 ஸ்மார்ட்போன் இணையதளம் வழியாக நேரடியாக வாங்க முடியும். இது Blackview Oscal Pilot 2 ஆனது ஆரஞ்சு, பிளாக் மற்றும் க்ரீன் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








