Home
Mobile

புதிதாக 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது ப்ளாக்பெர்ரி

புதிதாக 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது ப்ளாக்பெர்ரி

கியூவர்டி கீப்பேட் வசதி என்றலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ப்ளாக்பெர்ரி மொபைல்களின் கீப்பேட் தான். டைப் செய்வதற்கு மிக எளிதாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ப்ளாக்பெர்ரி மொபைலின் கியூவர்டி கீப்பேட்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

இதேபோன்று, கீவெர்ட்டி கீபேடுடன் ஸ்லைடர் வசதிகொண்ட மொபைலையும், டச் ஸ்கிரீன் கொண்ட மற்றொரு மொபைலையும் அமெரிக்கவில் வெளியிட்டிருக்கிறது ப்ளாக்பெர்ரி. டார்ச்-9810, டார்ச்-9860 என்ற பெயரில் இந்த மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டி-மொபைல் நிறுவனம் மற்றும் ஏடி&டி தொலைத்தொடர்பு நிறுவனமும் இணைந்து இந்த இரண்டு ஸ்மார்ட் மொபைல்களை வெளியிட்டுள்ளன. அமெக்கரிக்காவில் வெளியாகியுள்ள இந்த மொபைல்கள், கூடிய விரைவில் இந்திய சந்தையிலும் வெளியிடப்பட உள்ளது.

ப்ளாக்பெர்ரி டார்ச்-9810 மொபைல் 3.2 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்லைடர் மொபைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ளாக்பெர்ரியின் இன்னொரு மொபைலான டார்ச்-9860 மொபைல் 3.7 இஞ்ச் டபில்யூவிஜிஏ திரை வசதி கொண்டது. டார்ச்-9810 மொபைலின் திரையைவிடவும், டார்ச்-9860 மொபைல் சற்று பெரிய திரையை கொண்டுள்ளது.

டார்ச்-9810, டார்ச்-9860 மொபைல்கள், ப்ளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் இயங்குதளத்தின் மூலம் இயங்குகிறது.

அதோடு இந்த இரண்டு மொபைல்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் எளிதாக இயங்க இதன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணைபுரிகிறது.

இன்னும் இரண்டு நாட்களில் டார்ச்-9810 ஸ்மார்ட் மொபைல் வெளியாக உள்ளது. டார்ச்-9810 மொபைல் 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளதால், நிறைய தகவல்களை சேரித்துக் கொள்ளலாம். 768 எம்பி ரேம் வசதியும் உள்ளது. ஒரு மொபைலில் திரையின் அளவைத் தெரிந்து கொண்ட பிறகு உடனடியாக, வாடிக்கையாளர்கள் அதன் கேமரா வசதியினை தெரிந்து கொள்வதில் அதிகம் ஆர்வம் கொள்கின்றனர்.

இந்த இரண்டு மொபைல்ளுமே 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் மிக ஸ்மார்ட்டாக புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும். 720பி எச்டி வேகத்தில் வீடியோவை பதிவு செய்கிறது.

டார்ச்-9810 மொபைலில் 4ஜி தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மொபைல்களிலும் சிறந்த தொழில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. டார்ச்-9810 மற்றும் டார்ச்-9860 மொபைல்கள் ஆடியோ, வீடியோ போன்ற வசதிகளுக்கு சப்போர்ட் செய்கிறது. அதோடு சோஷியல் நெட்வொர்க்குகளின் லாக் ஆன் செய்யும் வசதியையும் பெற முடியும்.

நிறைய அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்யும் வசதியினை ப்ளாக்பெர்ரி நிறுவனம் அளித்திருக்கிறது. ப்ளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் புதிய லிக்விட் கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தினைப் பெற முடியும். ப்ளாக்பெர்ரியின் டார்ச்-9810 மற்றும் டார்ச்-9860 மொபைல்கள் ரூ.30,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X