Home
Mobile

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் ப்ளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்கள்

By Super
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் ப்ளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்கள்
டார்ச் 9860 மற்றும் கர்வ் 9360 என்ற ஸ்மார்ட் மொபைல்களை அறிமுகம் செய்ய உள்ளது பல சாதனைகளைப் படைத்த ப்ளாக்பெர்ரி நிறுவனம். வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பு பெயர் பெற்ற பெல் நிறுவனம் இதனை வடிவமைக்கிறது. ப்ளாக்பெர்ரி 9860 சிறந்த 3.7 இஞ்ச் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்துடன் வெளிவர உள்ளது. இந்த மொபைல் ப்ளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டு இயங்குகிறது.

ப்ளாக்பெர்ரி 9360 மாடலும், ப்ளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குகிறது. 7.2 எம்பிப்பிஎஸ் வேகத்தில் டவுன்லோட் செய்ய உதவுகிறது. 9360 மாடலோ 2.44 எச்ஜிவிஏ இஞ்ச் திரையைக் கொண்டது. ப்ளாக்பெர்ரி 9860 போனில் வைபை புளூடூத் மற்றும் 4ஜி காம்பாட்டிபிலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 9360 மொபைலில் புளூடூத் மற்றும் வைபை வசதி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு மொபைல்களிலுமே இன்ஸ்டன்ட் மெசேஜ், பிக்சர் மெசேஜ், டெக்ஸ்ட் மெசேஜ், ரேடியோ போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளாக்பெர்ரி 9360 மற்றும் 9860 மொபைல்களில் ஜிபிஎஸ் நேவிகேட்டர் மற்றும் மொபைல் பேமென்ட் டெக்னாலஜி போன்ற உயர்ந்த தொழில் நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ப்ளாக்பெர்ரி மொபைல்களிலுமே 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் மொபைல்கள் மீடியாப் ப்ளேயர் வசதிக்கும் மற்றும் யூஎஸ்பி வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது. ப்ளாக்பெர்ரி 9860, ப்ளாக்பெர்ரி 9360 ஆகிய இரண்டு போன்களுமே 1230 எம்ஏஎச் பேட்டரி வசதியினைக் கொண்டது. அதோடு இரண்டு மொபைல்களும் வாய்ஸ் டையலிங், ஸ்பீக்கர் போன் போன்ற சவுகரியத்தையும் பெற வழி செய்கிறது.

ப்ளாக்பெர்ரி 9860 மொபைலில் 768 எம்பி ரேன்டம் அக்சஸ் மெமரி கொண்டது. இது 4ஜிபி மெமரி ஸ்டோரேஜ் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. அதோடு 9860 மாடலில் 1.2 ஜிஎச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 9360 மொபைல்களில் 800 எம்எச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 மணி நேரம் டாக் டைம் வசதியை கொடுக்கிறது. இந்த மொபைல் வெறும் 100 கிராம் எடையைக் கொண்டது.

ப்ளாக்பெர்ரி 9360 கர்வ் மொபைலின் விலை ரூ.19,000. ப்ளாக்பெர்ரி 9860 டார்ச் மொபைலின் விலை 29,000. கர்வ் 9360 மொபைலைவிடவும், 9860 மொபைல் விலை சற்று கூடுதலாகவும் தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X