பிளாக்பெர்ரி புதிய ஸ்மார்ட்போனின் மாதிரி மாடல்கள்!

By Super
|

பிளாக்பெர்ரி புதிய ஸ்மார்ட்போனின் மாதிரி மாடல்கள்!
பிளாக்பெர்ரி 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய ஸ்மார்ட்போனை எப்போது அறிமுகம் செய்யும் பிளாக்பெர்ரி நிறுவனம்? இது தற்போது எலக்ட்ரானிக் சாதன உலகில் உலவி வரும் கேள்வி, எதிர்பார்ப்பு என்று சொல்லி கொண்டே போகலாம்.

பிளாக்பெர்ரி-10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு பிளாக்பெர்ரியின் ஸ்லைடர் ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்பட்டது. இதன் பிறகு இந்த ஸ்மார்ட்போனின் பெயர் மிலன் என்றும் காற்றுவாக்கில் கசிந்தது.

இப்படி எந்த பெயர் கொண்ட ஸ்மார்ட்போனாக இருப்பினும் சரி. அடுத்து பிளாக்பெர்ரி-10 ஓஎஸ் கொண்டு வெளியாகும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்று கூட பலருக்கும் ஆர்வம் இருக்கும்.

இதற்காக பிளாக்பெர்ரி-10 இயங்குதளத்துடன் வெளியாகும் ஸ்மார்ட்போனுக்கு மாதிரி மாடல் (கான்செப்ட் மாடல்) வெளியாகி உள்ளது.

பிளாக்பெர்ரி-10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு பிளாக்பெர்ரியின் ஸ்லைடர் ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் பிறகு இந்த ஸ்மார்ட்போனின் பெயர் மிலன் என்றும் காற்றுவாக்கில் கசிந்தது.

பிளாக்பெர்ரி என்றாலே கியூவர்டி கீப்பேட் தான் பலருக்கும் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு தனது வடிவமைப்பில் ஒரு தனித்துவத்தினை கொடுத்தது பிளாக்பெர்ரி நிறுவனம். அதனால் நிச்சயம் புதிய பிளாக்பெர்ரி-10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வசதியுடன் வெளியாகும் என்று

கூறலாம்.

இப்படி வடிவமைப்பிலும் சரி தொழில் நுட்ப ரீதியாகவும் சரி, பிளாக்பெர்ரி-10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளியாகும் ஸ்மார்ட்போன் பல புதுமைகளை வழங்கும் என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

2013ம் ஆண்டிற்குள் இந்த பிளாக்பெர்ரி-10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X