Home
Mobile

பிளாக்பெர்ரி செல்போன் சேவை 3-வது நாளாக பாதிப்பு

By Super
பிளாக்பெர்ரி செல்போன் சேவை 3-வது நாளாக பாதிப்பு
டெல்லி: பிளாக்பெர்ரி சேவை நாடு முழுவதும் மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த செல்போனை பயன்படுத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் 'பிளாக் பெர்ரி' செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். பிளாக் பெர்ரி ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் இ மெயில் வசதி, இண்டர்நெட் வசதி போன்ற பல்வேறு ஆன்லைன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால், கடந்த 3 நாட்களாக அவர்களுக்கு இந்த ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் 'பிளாக் பெர்ரி' செல்போன் பயன்படுத்துவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதன் காரணமாக பிளாக் பெர்ரி பயன்படுத்துகிறவர்களுக்கு கட்டணம் ரத்து செய்யப்படுமா? என்று கேட்டதற்கு, "அப்படி கட்டணம் ரத்து செய்யப்படமாட்டாது," என்று நேற்று திட்டவட்டமாக மறுத்தது ஏர்டெல். வோடாபோன், ரிலையன்ஸ் நிறுவனங்கள் பதில் சொல்லவே மறுத்து விட்டன.

இது வாடிக்கையாளர்களை பெரும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. சேவையும் இருக்காது, கட்டணமும் குறையாது என்றால் என்ன அர்த்தம் என அவர்கள் சம்பந்தப்பட்ட சேவை மையங்களை நெருக்க ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பிளாக்பெர்ரி முற்றாக செயலிழந்துள்ளது.

பிளாக் பெர்ரி நிறுவனம், இந்த குறைபாடு விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X