பிளாக்பெரிQ5 ஸ்மார்ட்போன் ஹாட் விமர்சனங்கள்!!!

|

பிளாக்பெரி நிறுவனம் ஹை ரேஞ் ஸ்மார்ட்போன்களான பிளாக்பெரி Q10 மற்றும் Z10 மொபைல்களை வெளியிட்டாலும் மக்களை கவரும் வகையில் நல்ல சிறப்பம்சங்களுடன் மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்களை வெளியிடாமல் இருந்தது ஒரு குறையாகவே இருந்தது.

சில தினங்களுக்கு வெளியான பிளாக்பெரி Q5 இந்த குறையை தீர்த்துள்ளது. பிளாக்பெரி Q10ன் மினி வெர்ஷனாகவே இந்த ஸ்மார்ட்போன் சித்தரிக்கப்பட்டது. இதன் விலை ரூ.24,990 ஆகும்.

நமது ஹிஸ்பாட் அணியினர் பிளாக்பெரி Q5 ஸ்மார்ட்போனை சில நாட்களாக பயன்படுத்தி உள்ளனர். இதன் மூலம் அவர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் மற்றும் விமர்சனங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

பிளாக்பெரி Q5 ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

பிளாக்பெரி

பிளாக்பெரி

பாக்ஸில்

பிளாக்பெரி Q5 ஹேண்ட்செட்
யுஎஸ்பி கேபிள் கம் சார்ஜர்
மேனுயல்

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பொதுவாக பிளாக்பெரி போன்கள் கார்ப்ரேட் எக்ஸிகியூடிவ், புரோபஷ்னல் ஆபீஸர் போன்றோர்களுக்காக உருவாக்கப்பட்டது போல் தான் தோற்றம் அளிக்கும். பிளாக்பெரி நிறுவனம் இதில் இருந்து சற்று மாறுபட வேண்டும் என எண்ணுகிறது போல அதன் தாக்கம் இந்த ஸ்மார்ட்போனில் தெரிகிறது.

பிளாக்பெரி Q5 மோனா பிளாக் டிஸைன் கர்வ் சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்களை போல் உள்ளது. இருந்தாலும் இது இளைஞர்களை கவரும் சிறப்பம்சமும் கொண்டுள்ளது.

 பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

கிளாஸி ஹேன்ட்செட்டான பிளாக்பெரி Q5 3.1 இன்ஞ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் ரெசலூஸன் 720*720 பிக்சல்ஸ் ஆகும். டச் ஸ்கிரீன் மட்டும் அல்லாமல் இதில் கீபேடும் உள்ளது. இதன் ஸ்கிரீன் சிறியதாக இருந்தாலும் மிகவும் பிரமாதமாக உள்ளது. நமது அணியினருக்கு இதன் டிஸ்பிளேவில் எந்த குறையும் தெரியவில்லையாம்.

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5யில் 35 கீ பட்டன்கள் உள்ளன. இதன் எடை 120கிராம்ஸ். போனின் வலது பக்கம் வால்யூம் பட்டன்கள் உள்ளன. இடது பக்கம் மைக்கிரோ சிம் கார்ட், மைக்ரோ SD கார்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட்கள் உள்ளன.

போனின் மேல் பக்கம் 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் பவர் பட்டன் உள்ளது. பின்புறம் 5 மெகாபிக்சல் கேமரா மற்றும் எல்ஈடி பிளாஷ் உள்ளது. பிளாக்பெரி Q5யின் குறைபாடு இதன் பாடி உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் மெட்டிரியல் தான்.

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5யில் 1.2GHZ குவால்கம் டியுல் கோர் பிராசஸர் உள்ளது. மேலும் இதில் 2ஜிபி ராம் மற்றும் 8ஜிபி ரோம் உள்ளது. டியுல் கோர் பிராசஸர் கொண்ட இந்த மொபைலின் இயக்கம் மிகவும் வேகமாக இருந்தது

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5



பிளாக்பெரி Q5யின் மிகப் பெரிய பிளஸ் பாயின்ட் இதன் பிளாக்பெரி 10 ஓஎஸ் தான். இந்த ஓஎஸ்ல் உள்ள ஹப், நோட்டிபிக்கேஷன், பிபிஎம், டெக்ஸ்ட் மெசேஜஸ், பேஸ்புக், டிவிட்டர், கால்ஸ் மற்றும் வாய்ஸ் கால் போன்றவைகளின் அப்டேட்களை கொண்டுள்ளது.

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

இதன் ஹோம்ஸ்கிரீனில் ஆக்டிவ் வின்டோக்கள் உள்ளன. இந்த ஓஎஸ்ல் உள்ள சிறப்பு இதில் நாம் எளிதாக மெசேஜ் மற்றும் இதர அப்டேட்களை அறியலாம். இந்த மொபைல் 10.1 வெர்ஷன் பிளாக்பெரி ஓஎஸ்யை கொண்டுள்ளது.

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5 5மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. இது 8மெகாபிக்சல் கேமரா கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த கேமராவில் வெளிபுறங்களில் பேட்டோ எடுக்கும் பொழுது ஓரளவு நன்றாக இருந்தாலும் உட்புறம் பேட்டோ எடுக்கும் பொழுது சத்தம் வருகின்றன சரியாக இருப்பதில்லை. இந்த பிரண்ட் கேமராவும் நார்மலாக தான் உள்ளது.

பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

கேமரா மோட்கள் இதில் நிறைய உள்ளன. மேலும் இதில் டிஜிட்டல் ஜும் உள்ளது ஆனால் ஜூம் செய்து எடுக்கும் பொழுது போட்டோ மங்கலாக உள்ளது.

 பிளாக்பெரி Q5

பிளாக்பெரி Q5

இதில் ஸ்டோரி மேக்கர் என்ற அப்ளிகேஷன் உள்ளது. இதன் மூலம் உங்கள் கதையில் நீங்கள் படங்கள், மியூசிக், வீடியோ ஆகியவற்றை இணைத்து கதையை உருவாக்கலாம்.
ஓன் ஸ்டாப் ஷாப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் கேம் மற்றும் மியூசிக் போன்றவைகளை பெறலாம்.

இதில் 2180mAh பேட்டரி இல்லது. இதன் ஸ்பீக்கர் மற்றும் வீடியோ பிளேயர் நார்மலாக இயங்குகிறது.

பிளாக்பெரி

பிளாக்பெரி

டிஸ்பிளே, பிளாக்பெரி 10 ஓஎஸ் மற்றும் பிராசஸர் வேகம் ஆகியவை இதன் நிறை ஆகும். கேமரா மற்றும் பிளாஸ்டிக் பேக் பேனல் இதில் உள்ள குறை.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X