உயர் தொழில் நுட்பத்தில் பிளாக்பெர்ரியின் போர்ஷே ஸ்மார்ட்போன்!

By Super
|

உயர் தொழில் நுட்பத்தில் பிளாக்பெர்ரியின் போர்ஷே ஸ்மார்ட்போன்!
உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வழங்கும் பிளாக்பெர்ரி போர்ஷே பி-9531 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. இது சிடிஎம்ஏ தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன். இது கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 640 X 1944 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும் 2.8 இஞ்ச் திரை வசதியை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் சிறந்த புகைப்படத்தையும், வீடியோவினையும் வழங்க இந்த ஸ்மார்ட்போன் உதவும். இதன் 5 மெகா பிக்ஸல் கேமரா 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தையும் கொடுக்கும்.

பிளாக்பெர்ரி-7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போனின் ஓஎஸ் சிறப்பாக இயங்க 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் உதவும். பி-9531 பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனில் 1,000 எம்ஏஎச் கொண்ட எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும். பி-9531 ஸ்மார்ட்போனின் விலையும், இந்த ஸ்மார்ட்போன் எப்பொழுது வெளியாகும் என்ற தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X