புதிய அப்டேஷனை பெற இருக்கும் பிளாக்பெர்ரி போல்டு-9790 ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
புதிய அப்டேஷனை பெற இருக்கும் பிளாக்பெர்ரி போல்டு-9790 ஸ்மார்ட்போன்!
உயர்ந்த வகை தொழில் நுட்பம் வழங்குவதில் தனக்கு என்று ஒரு தனி முத்திரை பதித்து இருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். இது போன்ற புதிய புதிய அப்டேஷன் வசதிகளை கொடுப்பதன் மூலம் தனது தனித் தன்மையை நிரூபித்தும் இருக்கிறது. போல்டு-9790 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அப்டேஷன் வசதி காத்திருக்கிறது.

போல்டு-9790 ஸ்மார்ட்போனில் புதிய ஓஎஸ் 7.1.0.247 வெர்ஷன் அப்டேட் வசதியை வழங்கி உள்ளது. இந்த அப்டேஷனை நெட்டில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்யலாம். ஆனால் இதை பற்றிய தகவல்கள் ஏதும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த அப்டேஷன் வசதியை பிளாக்பெர்ரி நிறுவனத்திடம் இருந்து அதிகார பூர்வமான தகவல்கள் வெளி வந்த பின்பு டவுன்லோட் செய்வது நல்லது. இதில் சில பிரச்சனைகள் நேர்ந்தால் அதனால் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனில் உள்ள மற்ற தொழில் நுட்பங்களும் பாதிக்கலாம். அதனால் பொருத்திருந்து இந்த புதிய பிளாக்பெர்ரி அப்டேஷனை பெறுவது சிறந்த பயனை அளிக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்