Home
Mobile

வியப்பில் ஆழ்த்த வரும் புதிய பிளாக்பெர்ரி போன்கள்!

By Super

வியப்பில் ஆழ்த்த வரும் புதிய பிளாக்பெர்ரி போன்கள்!
மின்னனு சாதன உலகில் இப்பொழுது பிளாக்பெர்ரி என்ற பெயர் அடிக்கடி எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணம் யோசிக்க வேண்டியதே இல்லை. இதன் புது விதமான படைப்பு என்று யார் வேண்டுமானாலும் எளிதாக சொல்லி விட முடியும். அனைவரையும் அதிசயிக்க வைக்க இருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனத்தின் புதிய

ஸ்மார்ட்போனான பிளாக்பெர்ரி மிலன், பிளாக்பெர்ரி லண்டன் என்ற புதிய ஸ்மார்ட்போன்கள்.

மிலன் ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது ஸ்லைடர் வடிவமைப்பை பெற்றுள்ளது. இதனால் இதில் டைப் செய்யும் போது கம்ப்யூட்டர் கீபோர்டில் டைப் செய்வது போன்ற சவுகரியத்தினை பெற முடியும். பிளாக்பெர்ரி லண்டன் ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டிஐ ஓஎம்ஏபி ஆற்றல் கொண்ட பிராசஸரையும் கொடுக்கும்.

மிலன் ஸ்மார்ட்போன் அகன்ற திரை வசதி கொண்டதாகவும், அந்த திரை தொடுதிரை வசதி கொண்டதாகவும் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பிராக்ஸிமிட்டி சென்சார், லைட் சென்சார் போன்ற தொழில் நுட்பங்களை மிலன் ஸ்மார்ட்போனின் மூலம் பெறலாம்.

லண்டன் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெற்றுள்ளதால் இந்த ஸ்மார்ட்போனில் விரும்பிய தருணங்களை அழகாக புகைப்படம் எடுத்து கொள்ளலாம். பிளாக்பெர்ரி லண்டன் ஸ்மார்ட்போனில் 16ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 2 ஸ்மார்ட்போன்களும் இன்டர்நெட் மற்றும் 3ஜி தொழில் நுட்பத்தினையும் வழங்கும். கூகுள் அப்ளிக்கேஷன், சோஷியல் நெட்வொர்கிங் அப்ளிக்கேஷன் போன்றவற்றை எளிதாக பயன்படுத்தலாம்.

இப்படி பலவகையான புதுமைகளை பெற்றிருக்கும் இந்த பிளாக்பெர்ரி மிலன் மற்றும் பிளாக்பெர்ரி லண்டன் ஸ்மார்ட்போன்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ஆச்சர்யம் காத்திருக்கிறது. கூடியவிரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவர இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X