கர்வ் வரிசையில் புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
கர்வ் வரிசையில் புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்!
மலிபு என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி உள்ளது பிளாக்பெர்ரி நிறுவனம். கர்வ் சிரீஸ் ஸ்மார்ட்போனான இந்த மலிபு சிடிஎம்ஏ வசதி கொண்டது. 3.2 இஞ்ச் திரை வசதியில் வாடிக்ககையாளர்களை குதூகலப்படுத்தும் இந்த பிளாக்பெர்ரி மலிபு ஸ்மார்ட்போன் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தில் அசத்தும்.

மல்டி தொடுதிரை வசதி கொண்ட இந்த மலிபு ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரி-7.1 இயங்குதளத்தில் இயங்கும். இதன் இயங்குதளம் அதி வேக்ததில் இயங்க 800 மெகாஹெர்ட்ஸ் மார்வெல் பிஎக்ஸ்-ஏ930 பிராசஸர் கொண்டது.

இதன் 4.9 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும். பொழுதுபோக்கு அம்சமாக இதில் விடியோ மற்றும் ஆடியோ பிளேயர் வசதியினையும் பெற முடியும்.

2ஜி  மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் எளிதாக சப்போர்ட் செய்யும். ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்ப வசதிகளின் மூலம் பிரவுசிங் வசதியினையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.  இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.

ஆனாலும் கவர்ச்சிகரமான விலை கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிடிஎம்ஏ நெட்வொர்க் வசதி கொண்ட சிறந்த ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மலிபு பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் சரியானதாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்