வரும் டிசம்பரில் புதிய ஸ்மார்ட்போன்: பிளாக்பெர்ரி திட்டம்

By Super
|
வரும் டிசம்பரில் புதிய ஸ்மார்ட்போன்: பிளாக்பெர்ரி திட்டம்
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் நடந்து வரும் அடிதடிகளுக்கு நடுவில் சிக்கி பிளாக்பெர்ரி போன்கள் தனது மார்க்கெட்டை இழந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு ஆப்பிள் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பிளாக்பெர்ரியின் மார்க்கெட்டை கடுமையாகவே பாதித்துள்ளன.

இதை உணர்ந்துகொண்ட பிளாக்பெர்ரி நிறுவனம் பழைய மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க கடந்த சில மாதங்களாக தீவிரமாக முயன்று வருகிறது.இதற்காக, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, தேவைக்கேற்ப பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதில், முதலாவதாக பிளாக்பெர்ரி போல்டு டச்-9900 என்ற பெயரில் புதிய மாடலை விரைவில் அறிமுகம் செய்கிறது. பிளாக்பெர்ரி போன்களுக்கு உரித்தான கிவெர்ட்டி கீபேடுடன் 2.8 இஞ்ச் டச் ஸ்கிரீனுடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து பார்மெட்டுகள் கொண்ட ஆடியோ பைல்களிலும் இசையை கேட்கலாம். வீடியோ ப்ளேபக், எச்-263 மற்றும் எச்-264 பார்மெட்டுகளில் ஹைடெபினிஷனில் துல்லியமான படங்களை பார்க்கும் தொழில்நுட்பமும் இருக்கிறது.

இது பிளாக்பெர்ரி-5 வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 768 எம்பி ரேம் கொண்டுள்ளதால், பன்முக செயல்பாடுகளில் சிறப்பாக இருக்கும். 8ஜிபி மெமரி திறனை கொண்ட இந்த போனின் சேமிப்பு திறனை 32 ஜிபி வரை கூட்டிக்கொள்ளவும் முடியும்.

720பி எச்டி பார்மெட்டில் வீடியோ ரெக்கார்டிங் வசதி, 5மெகாபிக்செல் கேமரா வீடியோ காலிங் செய்வதற்காக முகப்பு கேமரா உள்ளிட்டவை டச்-9900க்கு சிறப்பு சேர்க்கிறது. 3ஜி நெட்வொர்க்கில் இதில் அதிவேக இன்டர்நெட் மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்ட தொடர்பு வசதிகளை பெற முடியும்.

இதுதவிர, புளூடூத், வைஃபை, யுஎஸ்பி கனெக்ட்டிவிட்டி ஆகிய இணைப்புகளை கொடுக்கும். 3ஜி நெட்வொர்க்கில் 14 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல் பரிமாற்றத்தை செய்யும் அனைத்து ஸ்மார்ட்போன் அம்சங்களும் இருக்கிறது.

பிளாக்பெர்ரி போல்டு டச்-9900 சிறப்பம்சங்கள்:

1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 768 எம்பி ரேம்

5 மெகாபிக்செல் கேமரா மற்றும் முகப்பு கேமரா

8ஜிபி இன்டர்நெல் மெமரி;32 ஜிபி வரை கூட்டிக்கொள்ளும் வசதி


3ஜி, ஜிபிஆர்எஸ், எட்ஜ் இணைப்புகள்

புளூடூத், வைஃபை

அருமையான பேட்டரி பேக்கப்

அடுத்த மாதம் பிரிட்டனில் அறிமுகப்படுத்த இருக்கும் இந்த போனுக்கான விலை உள்ளிட்ட விபரங்களை பிளாக்பெர்ரி நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. வரும் டிசம்பரில் இந்த போன் இந்தியாவில் அறிமுகப்படுத்த பிளாக்பெர்ரி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X