Home
Mobile

அடுத்த ஆண்டு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் ப்ளாக்பெர்ரி போன்

By Super
அடுத்த ஆண்டு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் ப்ளாக்பெர்ரி போன்

அடுத்த ஆண்டு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போனை ப்ளாக்பெர்ரி அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ப்ளாக்பெர்ரி உருவாக்கியுள்ள புதிய பிபிஎக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டு வெளிவரும் ப்ளாக்பெர்ரி லண்டன் மொபைல் போன் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

ப்ளாக்பெர்ரி ஏற்கனவே உருவாக்கிய க்யூஎன்எக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் தான் இந்த பிபிஎக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், க்யூஎன்எக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டு ஒரு ப்ளேபுக் டேப்லெட்டையும் ஏற்கனவே ப்ளாக்பெர்ரி அறிமுகப்படுத்தியுள்ளது.

பிபிஎக்ஸ் என்ற இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம், தனித்தன்மை கொண்ட புதிய ப்ளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் மார்க்கெட்டிற்கு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த ஸ்மார்ட் போன் 3.7 இஞ்ச் அகன்ற தொடுதிரையுடன் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில் நுட்பத்திலேயே வித்தியாசத்தை காட்டி இருக்கும் ப்ளாக்பெர்ரி நிறுவனம், வடிவமைப்பில் கவனம் செலுத்தாமலா இருக்கும்?.

நிச்சயம், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த புதிய மொபைல், தோற்றத்திலும் கண்டிப்பாக அசத்தும்.

இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சிறப்பாக இயங்க செய்யும் வகையில் அந்த ஸ்மார்ட்போனில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

இதில் 8 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவும், 2 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவும் இருக்கும் என்ற எதிர் பார்க்கப்படுகின்றது.

இதில் உள்ள 16ஜிபி இன்டர்னல் மெமரி, போதுமான அளவு சேமிப்பு திறனை வழங்கும்.

சாம்சங் எஸ்-2, ஆப்பிள் ஐபோன் 4-எஸ் போன்ற சிறந்த மொபைல்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் இந்த புதிய ஸ்மார்ட்போனை களமிறக்க ப்ளாக்பெர்ரி திட்டமிட்டுள்ளதாக மார்க்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X