அடுத்து 2 சிடிஎம்ஏ ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் பிளாக்பெர்ரி

Posted By: Staff

அடுத்து 2 சிடிஎம்ஏ ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் பிளாக்பெர்ரி
கர்வ் 9350 மற்றும் 9370 என்ற மொபைல்களை பிளாக்பெர்ரி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. டாட்டா டெலி சர்வீசஸ், எம்டிஎஸ் மற்றும் ஆர்காம் என்ற இந்த மூன்று நிறுவனங்களில் ஒன்று பிளாக்பெர்ரி கர்வ் மொபைல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

ஆனால் அது எந்த நிறுவனம் என்று முடிவாகவில்லை. இந்த இரண்டு மொபைல்களுமே 2.44 இஞ்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. அதோடு இந்த மொபைல்கள் சிடிஎம்ஏ தொழில் நுட்பம் கொண்டது. டைப் செய்வதற்கு எளிதான வகையில் கியூவர்டி கீப்பேட் பொருத்தப்பட்டுள்ளது.

பார்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக வடிமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். இதனால் வாடிக்கையாளர்கள் மனதில் பார்த்தவுடன் பதியும் தன்மைக் கொண்டது. இந்த இரண்டு மொபைல்களுமே பிளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது.

கர்வ் 9350, 9370 மொபைல்கள் 5 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது. இதில் நியர் ஃபீல்டு கம்யூனிக்கேஷன் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வசதி வயர்லெஸ் கனக்ஷனுக்கு உதவுகிறது. இதில் புளூடூத், வைபை, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் போன்ற வசதிகளையும் பெற முடியும்.

இந்த இரண்டு மொபைல்களிலுமே சிறந்த தொழில் நுட்பம் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதே போல் அனைவரும் விரும்பத்தக்க விலையில் இந்த மொபைல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot