பிளாக்பெர்ரி புதிய அவதாரம் : கலக்கலான க்ரிப்டன் ஸ்மார்ட்போனில் "அது" இல்லை.!
நிறுவனத்தின் மிகவும் பிரபலமான க்வார்ட்டி கீபேட் இதில் இடம்பெறாது.!
நம்முடைய கனவு ஸ்மார்ட்போன்களில் ஒன்றான பிளாக்பெர்ரி, நீண்ட காலத்திற்கு பின்னர் அதன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வண்ணம் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது முன்னர் வெளியான தகவலின் கீழ் பிளாக்பெர்ரி நிறுவனம் மோஷன் என்ற பெயரில் கருவி ஒன்றை வெளியிடும் என்பது வெளிப்பட்டது.
தற்போது அது மோஷன் அல்ல மோஷன் புல் டச் அம்சம் கொண்ட பிளாக்பெர்ரி 'க்ரிப்டன்' என்பது தெரிய வந்துள்ளது. கூறப்படும் இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய அம்சம் என்னவெனில், நிறுவனத்தின் மிகவும் பிரபலமான க்வார்ட்டி கீபேட் இதில் இடம்பெறாது என்பது தான். இறுதியாக க்வார்டி கீபேட் ஆனது முன்னர் வெளியான பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போனில் காணப்பட்டது.!

கடைசி ஸ்மார்ட்போன்
பிளாக்பெர்ரி கீஒன் ஆனது, இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.39,990- என்ற விலை நிர்ணயம் கொண்டு நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட கடைசி ஸ்மார்ட்போன் என்ற அறிவிப்புடன் வெளியானது. அதன் மிகச்சிறந்த சிறப்பம்சமாக வன்பொருள் க்வார்ட்டி கீபேட் இருந்தது.

கைரேகை ஸ்கேனர்
ஆனால், தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் அடுத்த பிளாக்பெர்ரி சாதனம் க்வார்டி கீபேட் கொண்டிருக்காது என்பதோடு, கைரேகை ஸ்கேனர் உட்பொதிக்கக்கூடிய பிளாக்பெர்ரி லோகோ உடனான ஹோம் பொத்தானை மட்டுமே கொண்டிருக்கும் என்கிறது.

ஷார்ட்கட்
அதன் வலது பக்க தொகுதியில் - பவர் மற்றும் வால்யூம் செயல்பாடுகளை நிகழ்த்தும் இரண்டு பொத்தான்களும், மூன்றாவது பொத்தான் இசை அல்லது நேரடியாக ஒரு பயன்பாட்டை தொடங்க அனுமதிக்கும் ஒரு ஷார்ட்கட் பொத்தானாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மென்பொருள் தொகுப்பு
கூறப்படும் இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் ஆனது சிறப்பானதொரு மென்பொருள் தொகுப்பு கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது. உடன் வெளியான லீக்ஸ் தகவலின் படி, இந்த தொலைபேசியூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் கீழ்ப்புறத்தில் ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. கீழே உள்ள பேனலில், ஸ்பீக்கர் கிரில் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 4000எம்ஏஎச்
பிளாக்பெர்ரி 'க்ரிப்டன்' ஸ்மார்ட்போன் சார்ந்த லீக்ஸ் வெளியாதொன்றும் முதல் முறையல்ல. முன்னர் ஒருமுறை அமெரிக்க எப்சிசி பட்டியலில் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி கொண்டு காணப்பட்டது. இந்த சாதனத்தின் மற்ற அம்சங்களை பொறுத்தமட்டில் முழு எச்டி டிஸ்பிளே, 4ஜிபி ரேம் மற்றும் 4000எம்ஏஎச் ஆகியவைகளை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications