8 ஜிபி ரேம் + 660 எஸ்ஓசி: மீண்டும் மிரட்ட வருகிறது பிளாக்பெர்ரி.!

சமீபத்திய தகலானது, கூறப்படும் பிளாக்பெர்ரி மொபைலின் மாடல் எண்களை - பிபிஇ100-1 மற்றும் பிபிஎப்100-1 - வெளிப்படுத்தியுள்ளது.

|

2017-ஆம் ஆண்டு வெளியான பிளாக்பெர்ரி நிறுவனத்தின் கீஒன் (KEYONE) ஸ்மார்ட்போனின் வியக்கத்தக்க வெற்றியைத் தொடர்ந்து டி.சி.எல் நிறுவனமானது மூன்று புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அவைகள் அதெனா (Athena), லூனா (Luna) மற்றும் யுனி (Uni) என்ற குறியீட்டு பெயர்களுடன் இணையத்தில் கசிந்துள்ளன. இவைகள் கீக்பென்ஞ் தளத்திலும், ஐரோப்பிய சாதன பதிவு தரவுத்தளங்களிலும் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

8 ஜிபி ரேம் + 660 எஸ்ஓசி: மீண்டும் மிரட்ட வருகிறது பிளாக்பெர்ரி.!

சமீபத்திய தகலானது, கூறப்படும் பிளாக்பெர்ரி மொபைலின் மாடல் எண்களை - பிபிஇ100-1 மற்றும் பிபிஎப்100-1 - வெளிப்படுத்தியுள்ளது. இவைகளை உறுதி செய்யும் வண்ணம் இரண்டு புதிய விசைப்பலகை அடிப்படையிலான ஸ்மார்ட்போன்கள் வெளிவருமென்று அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிவிக்கின்றன.

பிளாக்பெர்ரி யுனி

பிளாக்பெர்ரி யுனி

டி.சி.எல் மற்றும் பிளாக்பெர்ரிக்கு சொந்தமான தொலைபேசியான - காப்புரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகளுக்கான சோதனைகளை கடந்த - 'யுனி' ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில் இது பிளாக்பெர்ரி பிரைவ் ஸ்மார்ட்போன் போன்று இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் பின்னிப்பிணைந்த உடல் விசைப்பலகை இருக்கும்.

5.5 இன்ச் டிஸ்ப்ளே

5.5 இன்ச் டிஸ்ப்ளே

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வரும். உடன் பிளாக்பெர்ரி பிரைவ் போன்றே இது ஒரு வளைந்த தொடுதிரை டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கலாம். வெளியான காப்புரிமையின்படி இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா தொகுதி இடம்பெறும். மென்பொருள் அடிப்படையில், பிளாக்பெர்ரி யுனி ஆனது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டிருக்கும்

பிளாக்பெர்ரி அதெனா

பிளாக்பெர்ரி அதெனா

பிளாக்பெர்ரி அதெனா (Athena) ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், இது ஒரு விசைப்பலகை அடிப்படையிலான வடிவமைப்பை கொண்டிருக்கும் மற்றும் பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போனை விட பெரிய விசைகளை கொண்டு வெளியாக வேண்டும். மேலும் இந்த சாதனம் 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு கொண்டுருக்கலாம்.

இரட்டை பின்புற கேமரா

இரட்டை பின்புற கேமரா

இக்கருவியிலும் இரட்டை பின்புற கேமரா தொகுதி சிறப்பம்சமாக அமையும். க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 ப்ராஸசருடன் இயங்கும் அதெனாவின் வெளியீடு பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை. ஆனால், ஒரு லீக்ஸ் தகவலின்படி ஏப்ரல் 2018-ல் வெளியாகலாம் அல்லது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் அறிவிக்கப்படலாம்.

பிளாக்பெர்ரி லூனா

பிளாக்பெர்ரி லூனா

இறுதியாக, பிளாக்பெர்ரி லூனா ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், ஒரு நடுநிலை மாதிரி என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் கசிந்த பிளாக்பெர்ரி லூனாவின் அசல் போஸ்டர் ஆனது ஸ்மார்ட்போனிற்கான ஆகஸ்ட் வெளியீட்டை குறிப்பிடுகிறது. இருப்பினும், அதுவொரு அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்

கீக்பெஞ்ச்சில் இக்கருவி காணப்பட்டது

கீக்பெஞ்ச்சில் இக்கருவி காணப்பட்டது

இதற்கு முன்னர் தரப்படுத்தல் வலைத்தளமான கீக்பெஞ்ச்சில் இக்கருவி காணப்பட்டது. வெளியான பட்டியலின் படி, வரவிருக்கும் இந்த பிளாக்பெர்ரி சாதனத்தின் மாடல் எண் க்வால்காம் பிபிஎஃப்100-1 ஆகும். இந்த பிபிஎஃப் 100-1 ஆனது, இந்த ஆண்டு தொடங்கப்பட்ட பிளாக்பெர்ரி கீஒன் மாடலின் அப்டேட் கருவியாக இருக்கலாமென எதிர்பார்க்கப்பட்டது.

பிளாக்பெர்ரி கீடூ

பிளாக்பெர்ரி கீடூ

பிளாக்பெர்ரி கீடூ (KEYtwo) என்று அழைக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் இந்த சாதனம் தரப்பட்டியலின், சிங்கிள் கோர் சோதனையில் 1532 மதிப்பெண்களும் மற்றும் மல்டி கோர் சோதனையில் 4185 மதிப்பெண்களும் பெற்றுள்ளது.

6 ஜிபி ரேம்

6 ஜிபி ரேம்

அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த தொலைபேசி ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. உடன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் உடனான 6 ஜிபி ரேம் உடன் இணைந்து செயல்படலாம். எதிர்பார்க்கும் வெளியீட்டு தேதி அல்லது இதற்கு மேலான விவரங்கள் ஏதுமில்லை.

ரூ.39,990/- என்ற விலை நிர்ணயம்

ரூ.39,990/- என்ற விலை நிர்ணயம்

கடந்த ஆகஸ்ட் மாதம், பிளாக்பெர்ரி நிறுவனம் இந்தியாவில் கீஒன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதன் லிமிடெட் எடிஷன் (பிளாக்) ஆனது ரூ.39,990/- என்ற விலை நிர்ணயம் பெற்றது. இக்கருவி முதலில் கடந்த ஆண்டு நிகழ்த்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீஒன்

கீஒன்

ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரி, கீஒன் ஆனது, ஆப்டீமஸ் மற்றும் பிளாக்பெர்ரி நிறுவனங்களுக்கு இடையே நிகழ்த்த "கையொப்பமிடப்பட்ட பிராண்ட் ஒத்துழைபின்" விளைவாக உருவானதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கீஒன் ஸ்மார்ட்போன் ஆனது பிளாக்பெர்ரி நிறுவனத்தின் ஐகானிக் நான்கு வரிசை விசைப்பலகையைத் தக்கவைத்துக்கொண்டது. மேலும் நிறுவனம் வழங்கும் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

டச்-எனேபிள் பிஸிக்கல் கீபோர்ட்

டச்-எனேபிள் பிஸிக்கல் கீபோர்ட்

இந்த தொலைபேசி 1620 x 1080 என்ற தீர்மானத்திலான 4.5 இன்ச் ஐபிஎஸ்-கிரேட் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 3: 2 விஎன்கிற திரை விகிதத்தை வழங்குகிறது.உடன் டச்-எனேபிள் பிஸிக்கல் கீபோர்ட் ஒன்றும் அதன் பின் பலகத்தில் உள்ளது மற்றும் அதன் ஸ்பேஸ் பாரில் கட்டப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஒன்றும் கொண்டுள்ளது.

How to Find a domain easily for your business (TAMIL)
2டிபி

2டிபி

பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் செயலி உடனான 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் அட்ரெனோ 506 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு (3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு), மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடியது.

Best Mobiles in India

English summary
Blackberry KEYone Successor to Feature Snapdragon 660 SoC and Up to 8GB of RAM. Read more aboout this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X