இந்தியா : பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!
பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் முன்புற செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய சாதனத்தை அறிமுகப்படுத்துவதற்க்கு ஊடக அழைப்பிதழ்களை கொடுக்க தொடங்கிவிட்டது பிளாக்பெர்ரி நிறுவனம்.
ஆகஸ்ட் 1 ம் தேதி புது டெல்லியில் ஒரு நிகழ்வில் பிளாக்பெர்ரி நிறுவனம் அதன் புதிய மாடலை அறிமுகப்படுத்தும் என தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பிளாக்பெர்ரி கீஒன் அருமையான விசைப்பலகையை கொண்டுள்ளது, அதன்பின் உபயோகப்படுத்த மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

4.5-இன்ச் டிஸ்பிளே:
பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம்:
இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

12மெகாபிக்சல்:
பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் முன்புற செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 625:
இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, என தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது, மேலும் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

3505எம்ஏஎச்:
பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போனில் 3505எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொருத்தப்பட்டுள்ளது.

விலை:
பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.50,000 வரை இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications