யாரெல்லாம் பிளாக்பெர்ரி அவ்ளோதான் என்று கேலி செய்தது; இதோ பதிலடி.!

நோக்கியா மீது இந்தியர்களுக்கு இருக்கும் அதே காதல் பிளாக்பெர்ரி மீட்டும் உள்ளது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.

|

நோக்கியா மீது இந்தியர்களுக்கு இருக்கும் அதே காதல் பிளாக்பெர்ரி மீட்டும் உள்ளது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. தனித்துவத்தை விரும்பும் ஒவ்வொருக்கும் பிளாக்பெர்ரி மீது, ஒரு தாக்கம் இருக்கத்தான் செய்யும். அப்படியானதொரு தாக்கத்தை மீண்டும் ஏற்படுத்தும் முனைப்பின் கீழ் பிளாக்பெர்ரி நிறுவனம் அதன் கீ2 ஸ்மார்ட்போனை வடிவமைத்து வருகிறது.

ஏற்கனவே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பின் கீழ் இருக்கும் கீ2 ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வ டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. டீஸரில் காட்சிப்படும் கீ2 ஆனது பிளாக்பெர்ரி ரசிகர்களின் மற்றும் காத்திருப்போர்களின் ஆர்வத்தை எகிற வைத்துள்ளது என்ற கூறலாம்.

வடிவமைப்பு பற்றிய ஒரு தெளிவான பார்வை.!

வடிவமைப்பு பற்றிய ஒரு தெளிவான பார்வை.!

கூறப்படும் பிளாக்பெர்ரி KEY2 ஆனது வருகிற ஜூன் மாதத்தில், நியூயார்க்கில் நாடாகும் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகமாகவுள்ளது. அதனை முன்னிட்டு, பிளாக்பெர்ரி யூட்யூப் சேனலில், KEY2 ஸ்மார்ட்போனின் உத்தியோகபூர்வ டீஸர் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பற்றிய ஒரு தெளிவான பார்வை கிடைத்துள்ளது.

பிளாக்பெர்ரி லோகோ.!

பிளாக்பெர்ரி லோகோ.!

சரியாக 25-விநாடிகள் மட்டுமே நீடிக்கும் KEY2 டீஸர் ஆனது, அதன் டெக்ஸ்டர்டு பின்புல வடிவமைப்பு மற்றும் கிடைமட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் அதற்கான எல்இடி ப்ளாஷ் ஆகியவைகளை துல்லியமாக வெளிப்படுத்துகிறது. நிறுவனத்தின் பிளாக்பெர்ரி லோகோ ஸ்மார்ட்போனின் பின்னால் அமைந்துள்ளது

கீபேடில் மாற்றங்கள் இருக்காது.!

கீபேடில் மாற்றங்கள் இருக்காது.!

பிரதான மாற்றங்கள் உண்டானாலும் கூட, பிளாக்பெர்ரி KEY2 ஸ்மார்ட்போனில் QWERTY கீபேட்டில் எந்த வடிவமைப்பு மாற்றங்களும் இல்லை. இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் KeyOne ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட அப்க்ரேடட் பதிப்பாகும் என்பதால், கீபேடில் மாற்றங்கள் இருக்காது என்று முன்னரே எதிர்பார்க்கப்பட்டது, தற்போது அது உறுதியாகியுள்ளது.

இரட்டை சிம் ஆதரவு.!

இரட்டை சிம் ஆதரவு.!

ஜூன் 7 அன்று நியூயார்க்கில் வெளியாகும் பிளாக்பெர்ரி KEY2 ஆனது, முன்னதாக சீன சான்றளிப்பு வலைத்தளமான TENAA-வில் காணப்பட்டது. அதன் வழியாக சில அம்சங்கள் வெளியாகின. BBF100-4 என்கிற மாடல் எண்ணின் கீழ் காணப்பட்ட கீ2 ஆனது கிடைமட்டமாக அடுக்கப்பட்ட இரட்டை பின்புற கேமரா கட்டமைப்பு, கடினமான பின்புறம், 4G LTE ஆதரவு மற்றும் இரட்டை சிம் ஆகிய அம்சங்களை கொண்டிருந்ததது.

வழக்கத்திற்கு மாறாக இதில் கூடுதல் பெஸல்லெஸ் டிஸ்பிளே.!

வழக்கத்திற்கு மாறாக இதில் கூடுதல் பெஸல்லெஸ் டிஸ்பிளே.!

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, KEY2 ஆனது மல்டி டச் 4.5-இன்ச் டிஸ்பிளே, 3: 2 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் சைகை ஆதரவுடன் கூட ஒரு QWERTY கீபேட் ஆதரவு ஆகியவைகளை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்களின் பாணி மாற்றிவிட்டதால், கீ2 ஸ்மார்ட்போனில் வழக்கத்திற்கு மாறாக இதில் கூடுதல் பெஸல்லெஸ் டிஸ்பிளே இடம்பெறலாம்.

ஸ்னாப்டிராகன் 660 SoC உடனான 6 ஜிபி ரேம்.!

ஸ்னாப்டிராகன் 660 SoC உடனான 6 ஜிபி ரேம்.!

மேலும் கீ2 ஸ்மார்ட்போனில், மேல்பக்கத்தில் ஒரு 3.5மிமீ ஹெட்ஜாக், கீழே ஒரு யூஎஸ்பி டைப் -சி போர்ட், ஸ்னாப்டிராகன் 660 SoC உடனான 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு ஓரியோ போன்ற பல அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம். இதன் அதிகாரபூர்வமான புகைப்படங்கள், அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
BlackBerry KEY2 official teaser video reveals dual rear cameras, textured back. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X