இந்திய விற்பனையில் முதல் முறையாக புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்!

By Super
|

இந்திய விற்பனையில் முதல் முறையாக புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்!
வாடிக்கையாளர்களுக்கு அதிக தொழில் நுட்ப வசதிகளை வழங்கி உள்ளது பிளாக்பெர்ரி நிறுவனம். இப்போது கர்வ்-9220 என்ற புதிய ஸ்மார்ட்போனை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்பு வெளியான பிளாக்பெர்ரி நிறுவனத்தின் 8520 ஸ்மார்ட்போன் மாடலையும்விட, மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை கொண்டது.

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன், பிளாக்பெர்ரி-7.1 ஆப்பேரட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். பிளாக்பெர்ரி-8520 ஸ்மார்ட்போனையும்விட 1.2 மில்லி மீட்டர் மெலிதான தோற்றம் கொண்டது பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன். இதனால் கூடுதல் கவர்ச்சிகரமான தோற்றத்தினால் பார்ப்பவர்களின் கண்களை எளிதாக கவர்ந்துவிடும்.

பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன் 2.44 இஞ்ச் திரை வசதியை வழங்கும். பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1450 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் அதிக ஆற்றலை வழங்கும். இதனால் 7 மணி நேரம் டாக் டைம் மற்றும் 432 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும்.

இதே பிளாக்பெர்ரி-8520 ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு 1150 எம்ஏஎச் பேட்டரி கொண்டது. இதில் 4 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைம் மற்றும் 408 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும்.

இதனால் பேட்டரியை பொருத்த வரையில் பிளாக்பெர்ரி-8520 ஸ்மார்ட்போனையும், பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போனில் கூடுதல் பேட்டரி பேக்கப் வசதியை பெற முடியும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X