Home
Mobile

பிளாக்பெர்ரி கர்வ் 8520 போன்- சிறப்பம்சங்கள்

By Super
பிளாக்பெர்ரி கர்வ் 8520 போன்- சிறப்பம்சங்கள்
டெல்லி: என்னதான் பட்ஜெட் போன்களின் மீது உழன்று கொண்டிருந்தாலும், பிளாக்பெர்ரி மீது அனைவருக்கும் ஈர்ப்பு இருப்பதை மறுக்க இயலாது.

இந்த ஏக்கத்தை புரிந்துகொண்ட பிளாக்பெர்ரி நிறுவனம், நடுத்தர மக்களின் கைகளிலும் தவழும் வகையில் அறிமுகப்படுத்திய போன்தான் பிளாக்பெர்ரி கர்வ் 8520 மாடல்.

ஹைஎண்ட் போனுக்குரிய அனைத்து அடிப்படை அம்சங்களுடன் மார்க்கெட்டில் கலக்கி வரும் பிளாக்பெர்ரி கர்வ் 8520 போனின் சிறப்பம்சங்களை காணலாம்.

2.46 டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, கிவெர்ட்டி கீபேடுடன் வந்துள்ள இந்த போன் பிளாக்பெர்ரியின் வாரிசு என்பதை பார்த்தவுடன் தெரிந்துவிடுகிறது.

அப்ளிகேஷன்களை சுலபமாக தேர்வு செய்து இயக்கும் வகையில் கீபேடில் டிராக்பால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எம்பி3, எம்பி4, டபிள்யூஎம்வீ உள்ளிட்ட அனைத்து ஆடியோ பார்மெட் பைல்களையும் இயக்கலாம். ஜாவா சாப்ட்வேர் இந்த போனில் வீடியோ கேம்களை டவுன்லோடு செய்யவும் முடியும். இந்த போன் க்யூவீஜிஏ தொழில்நுட்பத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் ஆற்றல் கொண்ட 2 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

256எம்பி இன்டர்நெல் சேமிப்பு திறன் கொண்ட போனில் 32ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறனை அதிகரிக்கவும் முடியும். போட்டோ காலிங் வசதியையும் கொடுக்கிறது. ஜிபிஆர்எஸ், எட்ஜ், டபிள்யூலான் மற்றும் புளூடூத் ஆகிய இணைப்பு வசதிகளை கொண்டிருக்கிறது.

பிளாக்பெர்ரியின் சொந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன் 512 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரை கொண்டுள்ளது. எம்எம்எஸ், இமெயில், ஐஎம் வசதி மற்றும் எச்டிஎம்எல் பிரவுசர் இதன் மதிப்புக்கு காரணங்களாகின்றன.

இதன் பேட்டரி 408 மணிநேர ஸ்டான்ட்-பை மோடிலும், 4.5 மணிநேரம் டாக்டைமையும் கொடுக்கிறது. இந்த போன் ரூ.9,850 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X