பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களுக்கான புதிய அப்ளிகேஷன்கள்!

Posted By: Staff
பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களுக்கான புதிய அப்ளிகேஷன்கள்!
உலக புகழ்பெற்ற மொபைல் நிறுவனமான பிளாக்பெர்ரி நிறுவனத்தின் தொழில் நுட்பம் மட்டும் அல்ல இதன் யூக்திகளும் எப்பொழுதும் புதுமையாகத்தான் இருக்கிறது. புது வருடம் ஆரம்பித்துள்ள மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கும் மக்களுக்கு இன்னொரு இனிமையான விஷயம் காத்திருக்கிறது. அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் பல புதிய அப்ளிகேஷன் வசதிகளை கொடுத்து அசத்த இருக்கிறது பிளாக்பெர்ரி.

நியூ இயர் மேச்சப் கேம் அப்ளிகேஷன் வசதியும் இதில் உள்ளது. இந்த அப்ளிக்கேஷன் சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டாக இருக்கும். விளையாட்டு என்றால் இளைய வசது கொண்டவர்களுக்காக மட்டும் அல்ல, இந்த விளையாட்டு எல்லா வயதினர்களுக்கும் ஆர்வத்தினை கொடுக்கும். ஸ்னாப் மீ நீயூ இயர் என்ற புதிய அப்ளிக்கேஷனும் இருக்கிறது.

இந்த புதிய அப்ளிகேஷன் மூலம் எடுக்கும் புதிய புகைப்படங்களை அழகான ஃபிரேம் கொண்டு அலங்கரிக்கலாம்.

விரும்பியவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்க வேண்டும் என்றால் இதில் உள்ள கிஃப்ட் அண்ட் டேக் என்ற புதிய தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்தலாம். மொபைல்களின் ஸ்மார்ட்போன் திரையில் பயன்படுத்துகிற பேக்கிரவுன்டு மிக அவசியமான ஒன்று. இந்த பேக்ரவுண்டு மொபைலின் திரைக்கு ஒரு "கூல்" எஃபெக்ட் கொடுக்கிறது. அப்படி அழகான பேக்கிரவுன்டு கொடுக்க இதில் கிஃப்ட் அண்ட் டேக் பயன்படுத்தப்படுகிறது.

நியூ இயர் பார்டி நைட் என்ற ஒரு அப்ளிக்கேஷனும் இதில் உள்ளது. நியூ இயர் கவுன்டவுன் என்ற புதிய அப்ளிக்கேஷனை பயன்படுத்தி மொபைலில் உள்ள வால்பேப்பரை மாற்றலாம். இந்த வால் பேப்பரை ஒவ்வொரு முறையும் நாமே மாற்ற வேண்டியது இல்லை. ஆட்டோமேட்டிக்காக அதே மாறிவிடும்.

நியூ இயர் பார்டி ரெய்ன்போ லைட் அப்ளிக்கேஷனும் இதில் உள்ளது. இது போன்ற புதிய அப்ளிகேஷன்கள் நியூ இயர் கொண்டாட்டத்திற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்தி நிறைய வசதிகளை பெற முடியும். நியூ இயர் பார்டி நைட் அளிக்கேஷன் ரூ.55 விலையிலும், நியூ இயர் கவுன்டவுன் அப்ளிக்கேஷன் ரூ.75 விலையிலும் பெறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot