விரைவில் வருகிறது புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்!

பிளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் வரும் என்று தெரிகிறது. கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்8255டி பிராசஸர் 1200 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். 768 எம்பி சிஸ்டம் மெமரியும் இதில் உள்ளது. இந்த மெமரியை பயன்படுத்தி அதிக தகவல்களை சேமிக்க முடியும்.
2.8 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் டிஎப்டி தொழில் நுட்பத்தினை வழங்கும். 640 x 480 துல்லியத்தையும் பெறலாம். கியூவர்டி கீப்பேடும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. போல்டு டச்-9220
ஸ்மார்ட்போனிலும் மைக்ரோஎஸ்டி, மைக்ரோஎஸ்டிஎச்சி மெமரி கார்டு ஸ்லாட்டுகளும் உள்ளது.
மெயின் கேமரா 4.9 மெகா பிக்ஸல் கேமரா இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதால் அற்புதமான புகைப்படத்தையும் எடுக்க முடியும். போல்டு டச்-9920 ஸ்மார்ட்போன் 7.5ஜிபி வரை இன்டர்னல் மெமரியை வழங்கும்.
பிளாக்பெர்ரி போல்டு டச்-9220 ஸ்மார்ட்போனின் விலை குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications