Home
Mobile

ஆப்பிளுக்கு ஆப்பு, நோக்கியாவிற்கும் ஆப்பு - பிளாக்பெர்ரி அரோரா அறிமுகம்.!

பழைய பகையாளி மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தை களத்தில் குதித்துள்ளதின் விளைவாய் இரண்டு பக்கமும் நெருக்கடியை ஆப்பிள் நிறுவனம் உணரும்.!

By Muthuraj

பிளாக்பெர்ரி அரோரா - இந்தோனேஷியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ள முதல் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் ஆகும் மேலும் இரட்டை சிம் செயல்பாடு கொண்ட முதல் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிளுக்கு ஆப்பு, நோக்கியாவிற்கும் ஆப்பு - பிளாக்பெர்ரி அரோரா.!

ஏற்கனேவே நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளின் மறுவருகை காரணத்தினால் கலங்கிப்போய் கிடைக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இப்போது அதன் பழைய பகையாளி மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தை களத்தில் குதித்துள்ளதின் விளைவாய் இரண்டு பக்கமும் நெருக்கடியை ஆப்பிள் நிறுவனம் உணரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

இன்னும் சொல்லப்போனால் பிளாக்பெர்ரி அரோரா - நோக்கியா கருவிகளுக்கே சவால் விடும் என்பது போலத்தான் தெரிகிறது.!

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

இரட்டை சிம் (மைக்ரோ சிம்) அடிப்படையிலான இக்கருவி பிளாக்பெர்ரி ஒரு 5.5-அங்குல (720x1280 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

ரேம்

ரேம்

உடன் பிளாக்பெர்ரி அரோரா கருவியானது 4ஜிபி ரேம் இணைந்து ஒரு 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 425 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

கேமரா

ஒளியியல் அடிப்படையில், பிளாக்பெர்ரி அரோரா ஒரு 13 மெகாபிக்சல் பின்புற மற்றும் செல்பீகளுக்காக ஒரு 8 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

சேமிப்பு

சேமிப்பு

மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக சேமிப்பு நீட்டிப்பு ஆதரவு கொண்ட இயக்கருவி 32ஜிபி அளவிலான உள்ளடங்கிய சேமிப்பு கொண்டுள்ளது (அதிகபட்ச கொள்ளளவு குறிப்பிடப்படவில்லை).

பேட்டரித்திறன்

பேட்டரித்திறன்

இணைப்பு விருப்பங்கள் அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, மற்றும் வைஃபை ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது. 3000எம்ஏஎச் என்ற மெகா பேட்டரித்திறன் கொண்ட இக்கருவி அளவீட்டில் 152x76.8x8.5மிமீ மற்றும் 178 கிராம் எடையுடையது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இதன் உலக வெளியீடு மற்றும் இந்திய வெளியீடு பற்றிய அறிவிப்புகள் எதுமில்லை என்கிற போதிலும் ரூ.17,400/- என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேஷியாவில் ஏற்கனவே கடந்த மார்ச் 3-ஆம் தேதி முதல் முன்பதிவிற்கு திறந்துவிடப்பட்டு மார்ச் 12 வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு, வெள்ளி, மற்றும் தங்க நிற வகைகளில் கிடைக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ராகிங் செய்யப்பட்ட சுந்தர் பிச்சை - வெளிப்படுத்திய ஹாஸ்டல் நண்பர்.!

Best Mobiles in India

English summary
BlackBerry Aurora With Android 7.0 Nougat, Snapdragon 425 SoC Launched. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X