புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த பிளாக்பெர்ரி ஆயத்தம்

இதில் டைப் செய்வதற்கு எளிதாக இருப்பதற்கு க்யூவர்டி கீபோர்டு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் அனைவரும் விரும்பும் டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. 320 X 480 பிக்ஸல் டிஎஃப்டி டச் ஸ்கிரீன் மற்றும் ஏக்ஸிலரோமீட்டர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஹை ரிசல்யூஷன் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராவின் மூலம் டிஜிட்டல் சூம், ஆட்டோ போக்கஸ், ஜியோ டேகிங், ஃபேஸ் டிடெக்ஷன் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. இதில் நிச்சயம் 5 மெகா பிக்ஸலுக்கும் குறைவாக இருக்காது. போல்டு 9790 மாடலில் சிறந்த தொழில் நுட்பம் கொண்ட கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிக பட்சம் 2592 X 1944 பிக்ஸல் ரிசல்யூஷன் வசதியைப் பெறமுடியும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆடியோ மற்றும் வீடியோ வசதியும் இதில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி இன்டர்னல் மெமரியை கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் மைக்ரோ எஸ்டிஎச்சி கார்டு வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
32 ஜிபி வரை இதன் மெமரியை விரிவுபடுத்திக்கொள்ளலாம். இதில் உள்ள மெமரி வசதி மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் எஸ்எம்ஸ், எம்எம்எஸ், பாப் 3, ஐஎம்ஏபி, எஸ்டிபி, புஷ் இமெயில், ப்ளாக்பெர்ரி கனக்ட் போன்ற வசதிகளையும் கண் இமைக்கும் நேரத்தில் பெறமுடியும்.
தகவல் பரிமாற்றத்திற்கு புளூடூத் ஏ2டிபி, ஜிபிஆர்எஸ், எட்ஜ் காம்பாட்டிபிலிட்டி வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், ஓடிஏ வசதியும் இந்த ஹேண்செட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் கறுப்பு நிறத்தில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிம் ப்ளாக்பெர்ரி போல்டு மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications