புதிய இயங்குதளத்தில் பிளாக்பெர்ரி லண்டன் ஸ்மார்ட்போன்!

வருகிற ஆகஸ்டு மாதம் பிளாக்பெர்ரி லண்டன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் எதர்பார்ப்புகளை அதிகரிக்கிறது.
இந்த பிளாக்பெர்ரி லண்டன் நிச்சயம் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டதாக தான் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 3.7 அகன்ற திரை வசதியையும் வழங்கும். பிளாக்பெர்ரி-10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டிஐ ஓஎம்ஏபி டியூவல்-கோர் பிராசஸரை கொண்டது.
டியூவல் கேமரா வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்கட்போனில் 8 மெகாபிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெற முடியும்.
16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியன் மூலம் நிறைய தகவல்களை எளிதாக ஸ்டோர் செய்து கொள்ளவும் முடியும். பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களின் கம்பீரத்தை அதிகப்படுத்தும் வகையில் கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.
ஆகஸ்டு மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் வரை சற்று காத்திருக்க வேண்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications